திடீர் உடல் நலக்குறைவு: நடிகர் விஷால் மருத்துவமனையில் அனுமதி!
படப்பிடிப்பின் பொழுது ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவின் காரணமாக விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


புதுதில்லி: படப்பிடிப்பின் பொழுது ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவின் காரணமாக விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரபல இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான மெஹா ஹிட் படமான சண்டக்கோழி திரைப்படத்தின் இரண்டாம் பாகமான ‘சண்டக்கோழி 2’ படத்திலும் விஷால் நடித்து வருகிறார். தமிழ்புத்தான்று அன்று இப்படம் திரைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக படக்குழுவினர் இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்பொழுது தில்லியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அதில் விஷாலும் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில் படப்பிடிப்பின் பொழுது நடிகர் விஷாலுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து விஷால் தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...