கடனை எப்போது திருப்பி செலுத்துவீர்கள்?: லதா ரஜினியிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி!
கோச்சடையான் திரைப்படம் தொடர்பாக தனியார் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த்துக்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது...


கோச்சடையான் திரைப்படம் தொடர்பாக தனியார் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த்துக்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. மேலும், கோச்சடையான் படத்திற்கான கடன் ரூ 8.5 கோடியை எப்போது செலுத்துவீர்கள் என லதா ரஜினிகாந்துக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான "கோச்சடையான்' திரைப்படம் 2014-ஆம் ஆண்டு வெளியானது. கோச்சடையான் படத்தைத் தயாரிக்க, தனியார் நிறுவனத்திடம் வாங்கிய கடன் தொகையில் ரூ. 6.2 கோடியை லதா ரஜினிகாந்த் திருப்பிச் செலுத்தவில்லை என உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கின் விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது.
மீதிப்பணத்தைத் திருப்பித் தருவது குறித்து பிற்பகல் 12.30க்குள் பதிலளிக்க லதாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மீதிப்பணத்தைத் திருப்பித் தர முடியாது எனக் கூறினால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் லதா ரஜினிகாந்துக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...