ரூ. 500 கோடி வசூல்: பத்மாவத் படம் சாதனை!

இந்தியாவில் ராஜஸ்தான், கோவா, மத்தியப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் பத்மாவத் படம் வெளியாகாத நிலையிலும் இந்த வசூல் சாதனை... 
ரூ. 500 கோடி வசூல்: பத்மாவத் படம் சாதனை!
Updated on
1 min read

சமீபத்தில் வெளியான பத்மாவத் படம் உலகளவில் ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது.

பாலிவுட் இயக்குர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், பிரபல நடிகை தீபிகா படுகோன் நடித்துள்ள 'பத்மாவத்' திரைப்படத்தில், ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்த ராணி பத்மாவதியின் வரலாறு தவறாக சித்திரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அந்த சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இந்நிலையில், பல்வேறு தடைகளைக் கடந்து, உச்ச நீதிமன்றத்தின் அனுமதியுடன் அந்தத் திரைப்படம் சமீபத்தில் வெளியானது.

சர்ச்சைக்குரிய 'பத்மாவத்' திரைப்படத்துக்கு எதிராக, ராஜஸ்தான், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது. இப்போராட்டங்களின் எதிரொலியாக, ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம், கோவா ஆகிய மாநிலங்களில் 'பத்மாவத்' படத்தை திரையிடமாட்டோம் என்று மல்டிபிளக்ஸ் திரையரங்கு உரிமையாளர்கள்
சங்கம் அறிவித்தது.

எனினும் சர்ச்சைகளால் மிகுந்த கவனத்துக்கு ஆளான பத்மாவத் படம் மகத்தான வசூலைக் கண்டுள்ளது. இந்தப் படம் உலகளவில் ரூ. 500 கோடி வசூலைத் தாண்டியுள்ளது. இந்தியாவில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான பத்மாவத், முதல் வாரத்தில் ரூ. 167 கோடியும் அடுத்த வாரத்தில் ரூ. 69 கோடியும் மூன்றாவது வாரத்தில் ரூ. 32 கோடியும் வசூலித்துள்ளது. 4-வது வார இறுதியில் ரூ. 8.75 கோடி வசூலித்து கடந்த ஞாயிறு வரை இந்தியாவில் ரூ. 277 கோடி வசூலித்துள்ளது. இது, கேளிக்கை வரியைக் கழித்துக் குறிக்கப்படும் தொகை. இந்தியாவில் ஞாயிறு வரை பத்மாவத் படம் ஒட்டுமொத்தமாக ரூ. 360 கோடி வசூலித்துள்ளது. வெளிநாடுகளில் ரூ. 188 கோடி என உலகளவில் கிட்டத்தட்ட ரூ. 547 கோடி வசூலித்துள்ளதாக மதிப்பிடப்படுகிறது.

இந்தியாவில் ராஜஸ்தான், கோவா, மத்தியப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் பத்மாவத் படம் வெளியாகாத நிலையிலும் இந்த வசூல் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. 

இப்படத்தில் இடம்பெற்றுள்ள சஞ்சய் லீலா பஞ்சாலி, ரன்வீர் சிங், ஷாகித் கபூர், தீபிகா படுகோன் ஆகியோரின் திரையுலக வாழ்வில் அதிகம் வசூலித்த படம் பத்மாவத் தான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com