உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

உதவி இயக்குநர்கள் தேவை: பிரபல இளம் இயக்குநர் அறிவிப்பு

நாடக மேடை படத்தில் பணியாற்ற 18 முதல் 30 வயதுக்குட்பட்ட ஆண்/பெண் உதவி இயக்குநர்கள் தேவை என அவர் ட்விட்டர் தளத்தில்...

News image
Updated On :20 பிப்ரவரி 2018, 5:24 am

எழில்

துருவங்கள் 16 படத்தின் மூலம் அதிகக் கவனம் பெற்ற இயக்குநர் கார்த்திக் நரேனின் அடுத்தப் படம் - நரகாசுரன்.

அரவிந்த் சாமி கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தை இயக்குநர் கெளதம் மேனன் தயாரித்துள்ளார். அரவிந்த சாமி, இந்திரஜித், சுந்தீப் கிஷன், ஸ்ரேயா சரண், ஆத்மிகா போன்றோர் நடித்துள்ள இப்படத்துக்கு இசை - யோகன். விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2-வது படம் இன்னும் வெளிவராத நிலையில் 3-வது படத்துக்குத் தயாராகிவிட்டார் கார்த்திக் நரேன். இப்படத்துக்கு நாடக மேடை என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாடக மேடை படத்தில் பணியாற்ற 18 முதல் 30 வயதுக்குட்பட்ட ஆண்/பெண் உதவி இயக்குநர்கள், நடிகர்கள் தேவை என அவர் ட்விட்டர் தளத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஆர்வம் உள்ளவர்கள் knightnostalgia@gmail.com என்கிற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும் என்றும் அறிவித்துள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.