உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

அஜித்தின் விசுவாசம் படத்தில் யோகி பாபு!

அஜித் - சிவா மீண்டும் இணையும் விசுவாசம் படத்தில் நடிக்க நகைச்சுவை நடிகர் யோகி பாபு ஒப்பந்தமாகியுள்ளார்...

News image
Updated On :21 பிப்ரவரி 2018, 9:06 am

எழில்

அஜித் - சிவா மீண்டும் இணையும் விசுவாசம் படத்தில் நடிக்க நகைச்சுவை நடிகர் யோகி பாபு ஒப்பந்தமாகியுள்ளார்.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் முதல் ஆரம்பமாகவுள்ளது.  தீபாவளி அன்று வெளியாகும் இப்படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கவுள்ளார்.

வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் சிவா. அதற்கு முன்பு கார்த்தி நடிப்பில் சிறுத்தை படத்தை இயக்கிய சிவா அதன்பிறகு அஜித் நடிக்கும் படங்களை மட்டுமே இயக்கிவருகிறார்.

சிவா இயக்கிய வீரம்  படத்துக்குப் பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் என்னை அறிந்தால் படத்தில் நடித்தார் அஜித். அதற்குப் பிறகு வேதாளம் படத்தில் தொடங்கி விசுவாசம் வரை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குநர் சிவாவின் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் அஜித். 

இதற்கு முன்பு சிவாவின் இயக்கத்தில் நடித்த மூன்று படங்களும் நல்ல வசூலை அடைந்ததால் மீண்டும் அவருக்கு வாய்ப்பளித்துள்ளார் அஜித். விசுவாசம் படமும் வெற்றியடைந்தால் ஐந்தாவது முறையாக அஜித் - சிவா இணைந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

இந்நிலையில் விசுவாசம் படத்தில் நடிப்பதாக நகைச்சுவை நடிகர் யோகி பாபு ட்விட்டர் தளத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.