ஏப். 3 முதல் தென் மாவட்டங்களில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்! விமான எரிபொருள் இருமடங்கு உயர்வு!உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

நன்றி தலைவா....: ரஜினியை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ் குஷி!

பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் அடுத்ததாக மெர்குரி என்கிற படத்தை இயக்கியுள்ளார்...

News image
Updated On :23 பிப்ரவரி 2018, 12:09 pm

எழில்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தைத் தயாரிக்கவுள்ளதாக சன் பிக்சர்ஸ் இன்று அறிவித்துள்ளது. காலா, 2.0 ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள ரஜினி, அரசியல் பரபரப்புகளுக்கிடையே இந்தப் படத்தில் நடிக்கவுள்ளார்.

இதையடுத்து ரஜினியின் படத்தை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ் ட்விட்டரில் கூறியதாவது: என் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விளக்க முடியவில்லை. என் கனவு நிறைவேறுகிற தருணம் இது. நன்றி தலைவா... என்று மகிழ்ச்சியுடன் ட்வீட் செய்துள்ளார்.

பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் அடுத்ததாக மெர்குரி என்கிற படத்தை இயக்கியுள்ளார். பிரபு தேவா, ரம்யா நம்பீசன், சனந்த், இந்துஜா (மேயாத மான் படத்தில் நடித்தவர்) நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்துக்கு இசை - சந்தோஷ் நாராயணன், பிரதீப் குமார். ஒளிப்பதிவு - திரு. கமலின் பேசும் படம் போல மெர்குரியும் ஒரு மெளனப் படமாகும். SILENCE IS THE MOST POWERFUL SCREAM என்று இந்தப் படத்தின் விளம்பர வாசகம் கூறுகிறது. வசனமே இல்லாத இந்தப் படத்துக்கு பின்னணி இசை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்தப் படம் தமிழ்ப் புத்தாண்டு சமயத்தில் வெளியாகவுள்ளது. ஏப்ரல் 13 அன்று மெர்குரி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.