அக்ஷய் குமார் நடித்துள்ள பேட்மேன்: ஏமாற்றமளித்த இரண்டாம் வார வசூல்!
முதல் வாரம் இந்தியாவில் ரூ. 63 கோடி வசூலித்தது பேட்மேன். ஆனால் இரண்டாவது வாரம் அதன் வசூல்...


தமிழரும் பிரபல இயக்குநருமான பால்கி இயக்கத்தில் உருவான 'பேட்மேன்' (PadMan) என்கிற ஹிந்திப் படம் சமீபத்தில் வெளியானது. அக்ஷய் குமார், சோனம் கபூர், ராதிகா ஆப்தே போன்றோர் நடித்துள்ளார்கள். தமிழகத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் குறைந்த விலையில் எப்படி சானிடரி நாப்கின் தயாரித்தார் என்பது பற்றிய உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. நடிகை டிவிங்கிள் கண்ணா இப்படத்தின் தயாரிப்பாளர்.
முதல் வாரம் இந்தியாவில் ரூ. 63 கோடி வசூலித்தது பேட்மேன். ஆனால் இரண்டாவது வாரம் அதன் வசூல் பலமடங்கு குறைந்து ரூ. 13.78 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இரண்டு வாரமும் சேர்த்து இந்தியாவில் கிட்டத்தட்ட ரூ. 77 கோடி வசூலித்துள்ளது.
முதல் வாரம் கிடைத்த வசூலின்படி, இந்தப் படம் இந்தியாவில் எப்படியும் ரூ. 100 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது சாத்தியமில்லை என்பதை இரண்டாவது வார வசூல் உணர்த்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...