4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்உள்ளூர் வேட்பாளர் வேண்டுமா? இறக்குமதி செய்த வேட்பாளர் வேண்டுமா? வேலுமணி பிரசாரம்தேர்தல் நேரம்! வாக்காளர் அட்டை அப்டேட் என்ற பெயரில் எஸ்எம்எஸ் வந்தால்?!ஏப். 3 முதல் தென் மாவட்டங்களில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்! விமான எரிபொருள் இருமடங்கு உயர்வு!உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு
/

நடிகை ஸ்ரீதேவி: காமராஜரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்!

அச்சிறுமியின் சுறுசுறுப்பைக் கண்ட காமராஜர் அருகில் இருந்த கவிஞர் கண்ணதாசனிடம் இந்த சிறுமியை சினிமாவில் நடிக்க வைக்கலாமே...

News image
Updated On :26 பிப்ரவரி 2018, 5:33 am

எழில்

சென்னை, பிப்.25: மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரால், குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்டவர் நடிகை ஸ்ரீதேவி.
ஸ்ரீதேவியின் தந்தை அய்யப்பனுக்கு சென்னை சிஐடி காலனியில் வீடு இருந்தது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அவர் அடிக்கடி சென்னை, தியாகராய நகர், திருமலைப்பிள்ளை சாலையில் உள்ள காமராஜர் வீட்டுக்குச் செல்வது வழக்கம். அவர் ஒரு முறை 4 வயது சிறுமியாக இருந்த ஸ்ரீதேவியை தன்னுடன் அழைத்துக் கொண்டு காமராஜரை பார்க்கச் சென்றார். 

அழகான அச்சிறுமியின் சுறுசுறுப்பைக் கண்ட காமராஜர் அருகில் இருந்த கவிஞர் கண்ணதாசனிடம் இந்த சிறுமியை சினிமாவில் நடிக்க வைக்கலாமே என்று கூறியுள்ளார்.  இதைக் கேட்ட கண்ணதாசனும் சாண்டோ சின்னப்பா தேவரிடம் சென்று சொல்லவே, உடனடியாக சிறுமி ஸ்ரீதேவி வரவழைக்கப்பட்டு "மேக்கப் டெஸ்ட்' போடப்பட்டு நடிப்பதற்கு தயார் செய்யப்பட்டார். சாண்டோ சின்னப்பா தேவரின் "துணைவன்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக ஸ்ரீதேவி அறிமுகமானது இப்படித்தான். அதுதான் அவர் திரையுலக வாழ்க்கையைத் தொடங்க காரணமாகவும் அமைந்தது.

இந்தியத் திரையுலகில் கோடிக்கணக்கான ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட நடிகை ஸ்ரீதேவி (54) , மாரடைப்பால் சனிக்கிழமை நள்ளிரவு துபையில் காலமானார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ஸ்ரீதேவி. 4 வயதில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கிய ஸ்ரீதேவி 50 ஆண்டுகளைக் கடந்து இந்திய சினிமாவில் கோலோச்சினார்.

இந்தியத் திரையுலகில் தனி இடத்தைத் தக்க வைத்திருந்த ஸ்ரீதேவியின் மறைவு சினிமா ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீதேவிக்கு கணவர் போனி கபூர், மகள்கள் ஜான்வி, குஷி ஆகியோர் உள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.