புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

காலா பட டீசர் நாளை வெளியீடு! சந்தோஷ் நாராயணன் உற்சாக ட்வீட்!

ஏப்ரல் 27 அன்று வெளியாகும் காலா படத்தின் டீசர் நாளை வெளியிடப்படுகிறது. இதையடுத்து படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்...

News image
Updated On :1 மார்ச் 2018, 5:04 am

எழில்

2.0 படத்தையடுத்து பா. இரஞ்சித் இயக்கத்தில் காலா என்கிற படத்தில் நடித்துள்ளார் ரஜினி. நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனத்தின் சார்பில் இப்படத்தைத் தயாரித்துள்ளார். இப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் வெளியாகிறது. இதற்கு முன்பு ரஜினியை வைத்து கபாலி படத்தை இயக்கினார் பா.இரஞ்சித். அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் ரஜினியை இயக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது. ஹூமா குரேஷி, சமுத்திரக்கனி, நானா படேகர், ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

ஏப்ரல் 27 அன்று வெளியாகும் காலா படத்தின் டீசர் மார்ச் 1 அன்று வெளியிடப்படும் என்று தனுஷ் அறிவித்துள்ளார். இதையடுத்து படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மிகவும் உற்சாகமாக ட்வீட் செய்துள்ளார். காலா டீசர் பணிகளின் இறுதிக்கட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.