சூர்யா - செல்வராகவன் இணையும் படம்: பூஜையுடன் ஆரம்பம்! (படங்கள்)
சூர்யா - இயக்குநர் செல்வராகவன் இணையும் படத்தின் பூஜை இன்று நடைபெற்றது...


சூர்யா - இயக்குநர் செல்வராகவன் இணையும் படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.
எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். தீபாவளியன்று வெளிவரவுள்ளது.
இன்று நடைபெற்ற பூஜை நிகழ்ச்சியில் சிவகுமார் உள்ளிட்ட சூர்யா குடும்பத்தினர் கலந்துகொண்டார்கள்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் என்கிற படத்தில் நடித்துள்ளார் சூர்யா. பொங்கல் அன்று இப்படம் வெளிவருகிறது. சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் மன்னவன் வந்தானடி படத்தை இயக்கி வருகிறார் செல்வராகவன். இதுதவிர, எஸ்.ஜே. சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள நெஞ்சம் மறப்பதில்லை படத்தையும் செல்வராகவன் இயக்கியுள்ளார். இந்தப் படம் விரைவில் வெளிவரவுள்ளது.



தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...