இயக்குநருடன் பிரச்னையா? தமன்னா என்ன சொல்கிறார்?

இந்தியில் கங்கனா ரனாவத் நடித்த வெற்றிப் பெற்ற படம் ‘குயின்’. இப்படத்திற்காக
இயக்குநருடன் பிரச்னையா? தமன்னா என்ன சொல்கிறார்?

இந்தியில் கங்கனா ரனாவத் நடித்த வெற்றிப் பெற்ற படம் ‘குயின்’. இப்படத்திற்காக கங்கனா ரனாவத் தேசிய விருது பெற்றார்.

இதே படம் தமிழில் காஜல் அகர்வால், தெலுங்கில் தமன்னா, மலையாளத்தில் மஞ்சிமா மோகன், கன்னடத்தில் பருல் யாதவ் ஆகியோர் நடிக்க நான்கு மொழிகளில் ரீமேக் ஆகி வருகிறது.

இப்படத்தின் தெலுங்கு மற்றும் மலையாள மொழியிலும் நீலகண்டா இயக்குகிறார். ஒவ்வொரு மொழியிலும் படப்பிடிப்பு உற்சாகமாக நடந்து வரும் நிலையில், தெலுங்குப் படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதலாக இயக்குநர் நீலகண்டாவுக்கும், நடிகை தமன்னாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது.

இந்தி குயின் படத்திலிருந்து மாறுபட்டு சில காட்சிகளை தென்னிந்திய ரசிகர்களுக்காக மாற்றி அமைத்துள்ளார் இயக்குனர் நீலகண்டா.  ஆனால் இது தமன்னாவுக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை. சில சமயம் எரிச்சலடைந்த தமன்னா படப்பிடிப்புக்கு வர மறுத்துள்ளார். தற்போது அவரிகளுக்கிடையே சமரச முயற்சி நடந்து வருகிறது.

குயின் படத்தின் தமிழ் மற்றும் கன்னட ரீமேக்கை ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முழுவதும் பிரான்ஸில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது.

காஜல், தமன்னா, மஞ்சிமா, பருல் ஆகிய நால்வரிடையே படப்பிடிப்பின் போது நல்லதொரு நட்பு உருவாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com