ஹைதராபாத்: ஆந்திராவில் காரிலிருந்து இறங்கி நடுரோட்டில் ரசிகர்களை நடிகர் சூர்யா எச்சரித்த விடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
நடிகர் சூர்யா இயல்பிலேயே பொது இடங்களில் அமைதியான அணுகுமுறையை கடைப்பிடிக்கக் கூடியவர். அத்துடன் தன்னுடைய ரசிகர்கள் மீது பேரன்பு கொண்டவர். ஆனால் அவரே ரசிகர்கள் மீது கோபப்பட்ட சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அதுதொடர்பான விடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சமீபத்தில் தனது திரைப்படம் தொடர்பான ஒரு நிகழ்ச்சிக்காக நடிகர் சூர்யா ஆந்திரா சென்றிருந்தார். நிகழ்ச்சியைத் முடித்து விட்டு சூர்யா தனது காரில் ஹோட்டல் நோக்கி சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது காரின் பின்னால் பைக்கில் வந்த ரசிகர்கள் அதி வேகத்தில் சூர்யாவின் காரை பின் தொடர்ந்திருக்கிறார்கள்.
இதனால் அதிருப்தியடைந்த சூர்யா தனது காரை நடு ரோட்டில் நிறுத்தி இறங்கி வந்து பைக்குகளில் பின்தொடர்ந்த ரசிகர்களைக் கண்டித்துள்ளார். பைக்கை வேகமாக ஓட்ட வேண்டாம் எனவும், அவர்களது உயிர் முக்கியம் எனவும் அறிவுரை கூறியிருக்கிறார்.
சூர்யாவின் இந்த வீடியோவானத்து தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
வீடியோ:
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மேக்கேதாட்டு விவகாரம் - மத்திய அரசிடம் தமிழக முதல்வா் பேச்சு நடத்த வேண்டும்: அன்புமணி

கிராம நிா்வாக அலுவலா் கொலை வழக்கில் இருவரின் ஆயுள் தண்டனை உறுதி: உயா்நீதிமன்றம்
எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: 11 விரைவு ரயில் சேவையில் மாற்றம்
சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 7 நாள்களில் 2,748 போ் கைது
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



