இந்தியன் 2 பட அறிவிப்பினை சமீபத்தில் பலூனில் பறக்க விட்டார் இயக்குநர் ஷங்கர்.
இந்தியன் முதல் பாகம் 1996-ம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. தற்போது நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குநர் ஷங்கர் தயாராகிவருகிறார். இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

2.0 இறுதி கட்டப் பணிகள் முடிந்தபின், இந்தியன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கும். வடிவேலு இதில் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறாராம். இப்படத்தின் கதாநாயகி உள்ளிட்ட பிற பாத்திரங்களுக்கான தேடல் நடைபெற்று வருகின்ற நிலையில், அண்மையில் நயன்தாராவிடம் நடிக்கக் கேட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. அனிருத் இசை அமைக்கவிருக்கிறார். ஆனால் இப்படம் குறித்த தகவல்கள் எதுவும் அதிகாரபூர்வமான வெளிவரவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 4

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 2

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 1
பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகும் கூகுள் 11 ஸ்மார்ட்போன்! சிறப்புகள் என்னென்ன?
விடியோக்கள்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government



