மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சாமி 2 படத்தில் த்ரிஷாவுக்குப் பதிலாக ஐஸ்வர்யா ராஜேஷ்! புகைப்படங்கள் வெளியீடு!

சாமி 2 படத்தில் முதலில் நடிகை த்ரிஷா நடிப்பதாக இருந்தது. பிறகு அப்படத்திலிருந்து விலகுவதாக த்ரிஷா அறிவித்தார்...

News image
Updated On :5 ஜூலை 2018, 5:54 am

செக்கச் சிவந்த வானம், கனா, லக்‌ஷ்மி, வடசென்னை, இது வேதாளம் சொல்லும் கதை...

இதுபோல முக்கியமான படங்களில் நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது மற்றொரு பெரிய படத்துடன் இணைந்துள்ளார். 

கடந்த 2003-ம் ஆண்டு விக்ரம், த்ரிஷா நடிப்பில் வெளிவந்த படம் சாமி. ஹரி இயக்கத்தில் வெளிவந்த இப்படம், வசூல் ரீதியாக பெரும் வெற்றியைப் பெற்றது. இதையடுத்து சாமி 2 (சாமி ஸ்கொயர்) படம் உருவாக்கப்பட்டு வருகிறது. ஹரி இயக்கத்தில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா. பிரபு, சூரி போன்றோர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். இசை - தேவி ஸ்ரீ பிரசாத். 

இந்நிலையில் சாமி 2 படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். 

சாமி 2 படத்தில் முதலில் நடிகை த்ரிஷா நடிப்பதாக இருந்தது. பிறகு அப்படத்திலிருந்து விலகுவதாக அவர் அறிவித்தார். எனினும் த்ரிஷா மீண்டும் சாமி 2 படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்றும் கூறப்பட்ட நிலையில் ஐஸ்வர்யா, விக்ரமுடன் இணைந்து நடித்த புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதையடுத்து த்ரிஷாவின் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா நடிப்பது உறுதியாகியுள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.