பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா பாலிவுட் ரசிகர்களிடையே மட்டுமல்லாமல் ஹாலிவுட்டிலும் புகழ்பெற்றவர். முன்னாள் உலக அழகியான பிரியங்கா சோப்ரா பாலிவுட்டில் முதன்முதலில் நடித்த படம் 'ஹீரோ: லவ் ஸ்டோரி ஆஃப் எ ஸ்பை’. அதன் பின்னர் பல இந்திப் படங்கள், மற்றும் சில தென்னிந்தியப் படங்களில் நடித்துள்ளார். தற்போது குவாண்டிகோ (Quantico) எனும் ஆங்கில வெப் சீரிஸில் நடித்து வருகிறார். சென்ற இடமெல்லாம் பேரும் புகழுமாக ஜொலித்துக் கொண்டிருக்கும் பிரியாங்காவின் கொடி தற்போது இன்னும் உயரப் பறக்கத் தொடங்கியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிக் பி அமிதாப் பச்சன் ஆகியோரை விட பிரியங்கா சோப்ராவை இன்ஸ்டாகிராமில் தொடர்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகிவிட்டது.

பிசி (PeeCee) என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் பிரியங்கா சோப்ராவின் ஃபேன் பாலோவர்கள் 2.5 கோடி நபர்கள் என்றால் ஆச்சரியமாக உள்ளதா! இந்தச் செய்தியை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் பிரியங்கா.

நீண்ட காலமாக சிங்கிளாக இருந்த பிரியங்கா, அண்மையில் பிரபல பாப் பாடகர் நிக் ஜொனாஸுடன் டேட்டிங்கில் உள்ளார் என்ற தகவல் பரவியது. மும்பையில் கடந்த ஜூன் 28-ம் தேதி முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் திருமண நிச்சயதார்த்த விழாவிற்கு இவர்கள் இருவரும் ஜோடியாக வந்து அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தினர்.

பிரியங்கா சோப்ரா அடுத்து அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில் ‘பாரத்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார். அவருடன் சல்மான் கான், திஷா படானி ஆகியோர் நடிக்கவிருக்கிறார்கள். இத்திரைப்படம் 2019-ம் ஆண்டு ரம்ஜான் பண்டிகையொட்டி வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உ.பி.யில் தனியார் நிறுவன ஊழியர்கள் போராட்டத்தில் வன்முறை
சட்டப்பேரவைத் தேர்தல்! டாஸ்மாக் கடைகளுக்கு எத்தனை நாள்கள் விடுமுறை?

”பாட்ட அமத்துங்க!” பிரசாரத்திற்கு நடுவே நுழைந்த தவெக ஆட்டோவை கண்டித்த திலகபாமா!
விரைவில் வெளியாகும் ஏழுகடல் ஏழுமலை!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


