நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘மாநாடு’!

இது ஓர் அரசியல் படம் என்பதை அதன் போஸ்டர் வழியாக அறிந்துகொள்ள முடிகிறது...

News image
Updated On :10 ஜூலை 2018, 5:50 am

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்துக்கு மாநாடு என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை வெங்கட் பிரபு இன்று வெளியிட்டார். இது ஓர் அரசியல் படம் என்பதை அதன் போஸ்டர் வழியாக அறிந்துகொள்ள முடிகிறது.

சென்னை-600028 II படத்துக்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘பார்ட்டி’. இந்தப் படத்தில் ஷாம், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா கெஸண்ட்ரா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ், நாசர், சந்திரன், சத்யராஜ் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். பிரேம்ஜி இசையமைத்துள்ளார்.  பார்ட்டி படத்துக்கு அடுத்ததாக மாநாடு படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். 

நடிகர் சிம்பு, மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்துள்ளார். அதற்கு அடுத்ததாக மாநாடு படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படம் அடுத்த வருடம் கோடை விடுமுறைச் சமயத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.