சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

சென்னையில் குறைந்த கட்டணத்தில் தொடங்கப்பட்டுள்ளது சத்யம் சினிமாஸின் ஐமேக்ஸ் திரையரங்கம்!

பலாஸோ ஐமேக்ஸ் திரையரங்கில் டிக்கெட் விலை ரூ. 300 மட்டுமே... 

News image
Updated On :19 ஜூலை 2018, 10:35 am

கடந்த 2015-ம் ஆண்டு, சென்னையில் ஐமேக்ஸ் திரையரங்கம் அறிமுகமானது. 

சென்னை வேளச்சேரியில் உள்ள ஜாஸ் சினிமாஸின் லூக்ஸ் திரையரங்குகளில், ஐமேக்ஸ் என்கிற விசேஷத் திரைப்படத் தொழில்நுட்ப வசதியுடன் ஒரு புதிய திரையரங்கம் செயல்பட ஆரம்பித்தது. ஐமேக்ஸ் தொழில்நுட்பத்துடன், ஜேம்ஸ் பாண்ட் நடித்த ஸ்பெக்டர் படம் 2015, நவம்பர் 20 அன்று திரையிடப்பட்டது.

இந்நிலையில் சென்னைக்கு மற்றொரு ஐமேக்ஸ் திரையரங்கம் கிடைத்துள்ளது. வடபழனியில் உள்ள விஜயா ஃபாரம் மாலில் அமைந்துள்ள சத்யம் சினிமாஸின் பலாஸோ திரையரங்குகளில் ஒன்று, ஐமேக்ஸ் திரையரங்கமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முதல் பலாஸோ ஐமேக்ஸ் திரையரங்கம் செயல்பட்டு வருகிறது. அதில் முதல் படமாக Ant-Man: And The Wasp திரையிடப்பட்டுள்ளது. 

வேளச்சேரியில் உள்ள ஜாஸ் சினிமாஸில் ஐமேக்ஸ் திரையரங்கில் டிக்கெட் விலை ரூ. 552. இந்நிலையில் சத்யம் சினிமாஸின் இந்த பலாஸோ ஐமேக்ஸ் திரையரங்கில் டிக்கெட் விலை ரூ. 300 மட்டுமே (3டி கண்ணாடி மற்றும் இணையக்கட்டணம் தனி. 3டி கண்ணாடி + இணையக் கட்டணத்துடன் ரூ. 360) இதனால் குறைந்த விலையில் ஐமேக்ஸ் திரையரங்கில் படங்கள் பார்க்கும் வாய்ப்பு சென்னை திரைப்பட ரசிகர்களுக்குக் கிடைத்துள்ளது.

சென்னை கோயம்பேட்டுக்கு அருகில் விஆர் மால் சமீபத்தில் திறக்கப்பட்டது. இதில் பிவிஆர் சினிமாஸின் திரையரங்குகள் உள்ளன. இதிலும் ஒரு ஐமேக்ஸ் திரையரங்கம் ஒன்று விரைவில் ஆரம்பமாகவுள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.