திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து பாடகி ரம்யா வெளியேற்றம்: வாக்கெடுப்பின் முடிவுகள் மீது ரசிகர்கள் அதிருப்தி!

பிக் பாஸ் நிகழ்ச்சி மற்றும் விஜய் டிவிக்கு எதிராகப் பலர் சமூகவலைத்தளங்களில் தங்களுடைய கருத்துகளை வெளிப்படையாக...

News image
Updated On :23 ஜூலை 2018, 3:25 pm IST

விஜய் தொலைக்காட்சியில் தினமும் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து பாடகி ரம்யா நேற்று வெளியேற்றப்பட்டுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த முடிவு ரசிகர்களிடம் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

 பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒரு வாரத்தில் அணித் தலைவராக இருந்தும் டாஸ்கிலிருந்து விலகியதால் ரம்யா நேரடியாக வெளியேற்றத்துக்குப் பரிந்துரைக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த முடிவு பலருக்கும் ஆச்சர்யத்தை வரவழைத்துள்ளது. இந்த மாதத்தின் இரண்டாவது வாரம் ட்விட்டரில் விஜய் டிவி நடத்திய ஒரு வாக்கெடுப்பில் யாஷிகா வெளியேறவேண்டும் எனப் பலர் அவருக்கு எதிராக வாக்களித்தார்கள். ஆனால் அந்த வார இறுதியில் நித்யா பாலாஜி வெளியேற்றப்பட்டார். இதற்கே ரசிகர்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் தங்களது அதிருப்தியைத் தெரிவித்தார்கள்.

இந்நிலையில் பாடகி ரம்யா இந்த வாரம் வெளியேற்றப்பட்டது ரசிகர்களிடம் விமரிசனங்களை வரவழைத்துள்ளது. இந்நிகழ்ச்சியில் புறம்பேசாத போட்டியாளராக உள்ளவர்கள் இருவர் மட்டுமே. ரம்யாவும் ரித்விகாவும். இந்நிலையில் ரம்யா வெளியேற வேண்டும் என்று ரசிகர்கள் விருப்பப்பட்டதாக முடிவு அறிவிக்கப்பட்டு நேற்று ரம்யா நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டது ரசிகர்களுக்குப் புதிராக அமைந்துள்ளது. இதையடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சி மற்றும் விஜய் டிவிக்கு எதிராகப் பலர் சமூகவலைத்தளங்களில் தங்களுடைய கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்கள். இந்த விவகாரத்தில் கமல் மீதும் விமரிசனங்கள் வைக்கப்பட்டுள்ளன. 

ரம்யாவின் வெளியேற்றம் ரசிகர்களின் தீர்ப்பினால் நிகழ்ந்தது அல்ல, ஐஸ்வர்யா தத்தா, யாஷிகாவுக்கு ஆதரவாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் முடிவுகள் அமைகின்றன, இதனால் வாக்கெடுப்பில் நம்பிக்கையின்மை ஏற்படுகிறது... இதையடுத்து தாங்கள் இனி வாக்களிக்கப் போவதில்லை எனப் பலரும் இதே கருத்துகளைத் தெரிவித்துள்ளார்கள். ரம்யாவினால் சர்ச்சை எதுவும் உருவாவதில்லை என்பதால் அவர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் ரசிகர்கள் தங்களுடைய ஆதங்கங்களை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

இதில் உள்ள மற்றொரு ஆச்சர்யம், ரசிகர்களின் இந்தக் கருத்துகளை பாடகி ரம்யா தனது ட்விட்டர் பக்கத்தில் ரீட்வீட் செய்திருப்பதுதான். இதையடுத்து பிக் பாஸின் முடிவு ரம்யாவுக்கும் ஏமாற்றத்தை அளித்திருப்பதை இதன்மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. நடிகர் சதீஷ், பாடகர் கிருஷ் ஆகியோரும் ரம்யாவின் வெளியேற்றத்துக்குத் தங்களின் அதிருப்தியைத் தெரிவித்துள்ளார்கள். 

Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.