சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சாமி 2 படப்பாடல்கள் வெளியீடு! செப்டம்பர் 20-ல் வெளியிடத் திட்டம்!

படத்தில் ஜோடியாக நடித்துள்ள விக்ரமும் கீர்த்தி சுரேஷும் ஒரு பாடலைப் பாடியுள்ளார்கள்...

News image
Updated On :24 ஜூலை 2018, 5:54 am

எழில்

கடந்த 2003-ம் ஆண்டு விக்ரம், த்ரிஷா நடிப்பில் வெளிவந்த படம் சாமி. ஹரி இயக்கத்தில் வெளிவந்த இப்படம், வசூல் ரீதியாக பெரும் வெற்றியைப் பெற்றது. இதையடுத்து சாமி 2 (சாமி ஸ்கொயர்) படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஹரி இயக்கத்தில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா, பிரபு, சூரி போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இசை - தேவி ஸ்ரீ பிரசாத். 

இந்நிலையில் சாமி 2 படப்பாடல்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இதில் படத்தில் ஜோடியாக நடித்துள்ள விக்ரமும் கீர்த்தி சுரேஷும் ஒரு பாடலைப் பாடியுள்ளார்கள்.

பாடல்கள் வெளியான கிட்டத்தட்ட இரு மாதம் கழித்து செப்டம்பர் 20-ல் சாமி 2 படம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.