அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி திருப்பூர் மேயர் ராஜிநாமா சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

ஸ்ரீதேவி மகள் அறிமுகமான படம், வசூலில் சாதனை: தயாரிப்பாளர் பெருமிதம்!

இந்தப் படம் முதல் வாரத்தில் இந்தியாவில் மட்டும் ரூ. 51.55 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது...

News image
Updated On :27 ஜூலை 2018, 12:25 pm

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், ஹிந்தியில், தடக் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். 

ஜான்வி, இஷான் நடிப்பில் ஷஸாங் கைதான் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - தடக். மராத்திப் படமான சாய்ரத்தின் ரீமேக் இது.  இந்தப் படம் கடந்த வாரம் வெளியானது.

இந்தியாவில் 2235, உலகளவில் 556 எனக் கிட்டத்தட்ட 2800 (2791) திரையரங்குகளில் தடக் படம் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்தப் படம் முதல் வாரத்தில் இந்தியாவில் மட்டும் ரூ. 51.55 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. புதுமுகங்கள் நடித்து அதிகம் வசூலித்த படம் என இந்தப் புள்ளிவிவரங்களைப் படத்தயாரிப்பாளரான கரண் ஜோஹர் ட்விட்டரில் தெரிவித்து தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்தப் படம் முதல் நாளன்று இந்தியாவில் ரூ. 8.71 கோடியும் முதல் மூன்று நாள்களில் ரூ. 34 கோடியும் வசூலித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.