ஜோதிகா நடிக்கும் காற்றின் மொழி: படப்பிடிப்பு தொடங்கியது! (படங்கள்)
கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் மட்டுமே நடித்து வரும் ஜோதிகா...


கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் மட்டுமே நடித்து வரும் ஜோதிகா, அடுத்து இந்தியில் வித்யாபாலன் நடித்த "தும்ஹாரி சுலு' வின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார். தனஞ்ஜெயனின் பாஃப்டா மீடியா ஒர்க்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் வானொலி தொகுப்பாளராக ஜோதிகா நடிக்கவுள்ளார்.
ராதாமோகன் இயக்கும் இப்படத்துக்கு காற்றின் மொழி என்று தலைப்பிடப்பட்டுள்ளது. விதார்த், லக்ஷ்மி மஞ்சு, மனோபாலா போன்றோரும் நடிக்கிறார்கள். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வெளியான துமாரி சுலு, ரூ. 20 கோடி பட்ஜெட்டில் உருவாகி, ரூ. 50 கோடி வசூலித்துள்ளது.
ஏ.ஹெச். காஷிஃப் என்கிற புதிய இசையமைப்பாளர் இப்படத்தில் அறிமுகமாகிறார். இவர், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் சகோதரி ஃபாத்திமாவின் மகன்.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமாகியுள்ளது. இன்று நடைபெற்ற பூஜை நிகழ்வில் ஜோதிகா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டார்கள். சூர்யா, சிவக்குமார் ஆகியோரும் பூஜையில் கலந்துகொண்டார்கள்.
அக்டோபரில் படம் வெளியாகவுள்ளது.
.jpg)
.jpg)
.jpg)

.jpg)
.jpg)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...