புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

தொலைக்காட்சி விவாதமாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான் பெயர் மாற்றம்!

என்னுடைய இந்தப் பெயர் மாற்றம் விவாதமாக மாறியிருப்பது அதிர்ச்சியாக உள்ளது. இது என் தனிப்பட்ட விஷயம்...

News image
Updated On :13 ஜூன் 2018, 8:41 am

எழில்

சமீபத்தில் வெளியான விஸ்வரூபம் 2 பட டிரெய்லர் மற்றும் போஸ்டர்களில் இசையமைப்பாளர் ஜிப்ரானின் பெயர், முகமது ஜிப்ரான் என்று இடம் பெற்றிருந்தது. இந்த மாற்றம் தொலைக்காட்சி விவாதமாகவும் மாறியுள்ளது.

தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் விஸ்வரூபம் 2 - சர்ச்சைகளை வேண்டுமென்றே கிளப்புகிறாரா கமல் என்கிற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் ஜிப்ரானின் பெயர் முகமது ஜிப்ரானாக மாறியது குறித்தும் விவாதிக்கப்பட்டது. 

அந்த விவாதத்தில் தொலைப்பேசி வழியாக ஜிப்ரான் அளித்த பேட்டியில் கூறியதாவது: என்னுடைய இந்தப் பெயர் மாற்றம் விவாதமாக மாறியிருப்பது அதிர்ச்சியாக உள்ளது. இது என் தனிப்பட்ட விஷயம். வாகை சூட வா படத்தின்போது என் பெயர் ஜிப்ரான் என்றுதான் இருந்தது. விஸ்வரூபம் பட வாய்ப்பு எனக்கு வந்தபோது நோன்பில் இருந்தேன். அதேபோல நோன்பின்போதும் விஸ்வரூபம் 2 பட டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

கமல் சாருடன் இணைந்து பல படங்கள் பணிபுரிந்துள்ளது என் வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. இறைவனின் அருளில்தான் இது நடந்துள்ளது. எனவே என் விருப்பத்தின் பேரில் கடவுளுக்கான சமர்ப்பணமாக இந்தப் பெயரை வைத்துக்கொண்டுள்ளேன். ஆனால் இது இவ்வளவு தூரம் சர்ச்சையாகிறது என்கிறபோது என்ன சொல்வதென்று தெரியவில்லை. இது விஸ்வரூபம் 2 படத்துக்காக மாற்றிக்கொண்ட பெயர் அல்ல என்று பேட்டியளித்தார்.

விவாதத்தின் இணைப்பு:

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.