நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விமரிசனங்களில் சறுக்கினாலும் வசூலில் சாதனை செய்த சல்மான் கான் படம்!

இந்த வரிசையில் ரேஸ் 3 படமும் இடம்பெறுமா என்கிற எதிர்பார்ப்பு தற்போது உருவாகியுள்ளது...

News image
Updated On :16 ஜூன் 2018, 8:57 am

எழில்

சல்மான் கான், ஜாக்குலின் பெர்னாண்டஸ், அனில் கபூர், பாபி தியோல் போன்றோர் நடிப்பில் ரெமோ டிசெளசா இயக்கத்தில் உருவான ரேஸ் 3 படம் நேற்று வெளியானது. 

சல்மான் கான் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம், மோசமான விமரிசனங்களைப் பெற்றாலும் வசூலில் எந்தவொரு குறையையும் வைக்கவில்லை. இந்தியாவில் இந்த வருடம் வெளியான படங்களில் முதல் நாளன்று அதிக வசூலைப் பெற்ற படம் என்கிற சாதனையைச் செய்துள்ளது.

ரூ. 25.10 கோடி வசூலித்த பாகி 2 பட சாதனையைத் தாண்டி முதல் நாளன்று ரூ. 29.17 கோடி வசூலித்துள்ளது ரேஸ் 3 படம். 

2018ல் அதிக முதல் நாள் வசூல்

ரேஸ் 3 - ரூ. 29.17 கோடி
பாகி 2 - ரூ. 25.10 கோடி
பத்மாவத் - ரூ. 19 கோடி

இதற்கு முன்னால் பஜ்ரங்கி பைஜான் (ரூ.102.60 கோடி), சுல்தான் (ரூ. 105.53 கோடி), டைகர் ஹிந்தா ஹை (ரூ. 114.93 கோடி) ஆகிய மூன்று சல்மான் கான் படங்களும் மூன்று நாள்களில் ரூ. 100 கோடியை வசூலித்துள்ளன. இந்த வரிசையில் ரேஸ் 3 படமும் இடம்பெறுமா என்கிற எதிர்பார்ப்பு தற்போது உருவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.