பிக் பாஸ் வீட்டுக்கு இன்றே செல்கிறார்கள் போட்டியாளர்கள்! இந்த இருவர் கட்டாயம் உண்டு!

பிரபல தனியார் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான பிக் பாஸ் போட்டியின் இரண்டாவது சீசனைக் காண ரசிகர்கள் தயாராகி
பிக் பாஸ் வீட்டுக்கு இன்றே செல்கிறார்கள் போட்டியாளர்கள்! இந்த இருவர் கட்டாயம் உண்டு!
Published on
Updated on
1 min read

பிரபல தனியார் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான பிக் பாஸ் போட்டியின் இரண்டாவது சீசனைக் காண ரசிகர்கள் தயாராகிவிட்ட நிலையில் அந்நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் யார் யாரென்ற விபரம் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை. அதை சர்ப்பரைஸாக நேயர்கள் நேரலையில் காண வேண்டும் என்பதே சானலின் முடிவு. பிக்பாஸ் சீசன் 2, நாளை இரவு 7 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது.

இந்நிலையில் போட்டியாளர்கள் இன்று இரவு முதலே பிக் பாஸ் வீட்டுக்குச் சென்று அங்கு தங்களுக்கு தரப்பட்ட இடத்தில் வசிக்கத் தொடங்கி விடுவார்கள். நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் கமல் ஹாசன், போட்டியாளர்கள் ஒவ்வொருவரையும் நேராக வீட்டுக்கு அனுப்பி வைப்பார். இதற்கான பிரம்மாண்ட விழா இன்று நடைபெறவிருக்கிறது.  

நாளை ஒளிபரப்பாகும் தொடக்க விழாவிற்கான ஷூட்டிங் இன்றே நடந்து விடும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். போட்டியாளர்களும் தங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் பொருள்களுடன் (பிக்பாஸ் வீட்டில் செல்போனுக்கு தடா, வெளியுலக வாழ்க்கையை மறந்துவிட வேண்டும்) பிக் பாஸ் வீட்டில் இன்று இரவு முதலே வாழத் தொடங்கி விடுவார்கள். தங்கள் இலக்கான 100 நாட்கள் வரை அங்கு யார் வசிக்கிறாரோ அவர்களே வெற்றியாளர். 

பார்வையாளர்களைப் போலவே போட்டியாளர்களுக்கும் சக போட்டியாளர் பற்றிய விபரங்கள் ஒன்றும் தெரியாது. இன்றைய படப்பிடிப்பின் போதுதான் மற்ற இன்மேட்ஸ் பற்றிய விபரம் தெரிய வருமாம். `பிக் பாஸ் சீஸன் 2'விற்கு கூடுதல் சுவாரஸ்யத்தைத் தந்துள்ளது அண்மையில் வெளியான ஒரு செய்தி. இங்கு தங்குபவர் பற்றிய விபரங்களில் ரகசியம் காக்கப்பட்டாலும். வீட்டுக்குள் வரவிருக்கும் இரு போட்டியாளரைப் பற்றிய விபரத்தை கமல் ஊகம் செய்யும்படியாக விளம்பரத்தில் வெளியிட்டார்.

அவர்கள் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யா. மகள் போஷிகாவுடன் தனியாக வாழும் நித்யா, பாலாஜியை பிரிந்து சில ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது இருவரும் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்கிறார்கள். எதிரும் புதிருமாக உள்ள இத்தம்பதியர் 100 நாள்கள் ஒரே வீட்டில் மீண்டும் வாழப் போகிறார்கள் என்பதைத் தான் கமல் இவர்கள் இந்த வீட்டில் இருந்தால் ரணகளமாகிவிடும் என்று கூறியிருக்கிறார். 

நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் கருதியும், டிஆர்பி ரேட்டிங்கிற்காகவும் இந்த முறை பிக் பாஸ் 2-வின் பங்கேற்பாளர்களை மிகவும் கவனத்துடன் தேர்ந்தெடுத்துள்ளனர். பவர் ஸ்டார், யாஷிகா, பிரசன்னா, சிம்ரன், ரம்பா உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்கலாம் என்று கூறப்படுகிறது. பிக் பாஸ் என்னவெல்லாம் செய்யப் போகிறது, கமல் எப்படி இந்த முறை சின்னத்திரையை பயன்படுத்தப் போகிறார் என்று அறிய ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com