ஃபெமினா இந்தியா நிறுவனம் இந்த வருடம் 10 பெண்களுக்கு சிறந்த மகள் (சூப்பர் டாட்டர்) என்கிற விருதை அளித்துள்ளது. இதற்கான விழா ஞாயிறன்று சென்னையில் நடைபெற்றது. வரலட்சுமி, உத்ரா உன்னிகிருஷ்ணன், ஜெயவீணா, டிடி என்கிற திவ்யதர்ஷிணி, நைனிகா உள்ளிட்ட 10 பேர் தங்கள் பெற்றோருடன் வந்து விருதைப் பெற்றுக்கொண்டார்கள். இந்த விழாவில் தங்களைச் சிறப்பாக வளர்த்ததற்காகப் பெற்றோருக்கு மகள்கள் விருது வழகுவது போன்று ஒரு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த விருதைத் தன் தாயுடன் வந்து பெற்றுகொண்ட டிடி, ட்விட்டரில் தெரிவித்ததாவது: இந்த விருதை அளித்த ஃபெமினா இந்தியாவுக்கு நன்றி. என் தாயுடன் மேடையேறியபோது படபடப்பாக இருந்தது. என் தாய்க்கு மரியாதை அளித்ததற்கு மிக்க நன்றி என்று கூறி விழாவின் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.



தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









