காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

காலா டீசரில் பிரித்து மேய்ந்த யோகி பி: சந்தோஷ் நாராயணன் புதிய தகவல்!

நாளை வெளியாகும் காலா பட டீசர் குறித்து புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்...

News image
Updated On :1 மார்ச் 2018, 7:30 am

எழில்

நாளை வெளியாகும் காலா பட டீசர் குறித்து புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.

2.0 படத்தையடுத்து பா. இரஞ்சித் இயக்கத்தில் காலா என்கிற படத்தில் நடித்துள்ளார் ரஜினி. நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனத்தின் சார்பில் இப்படத்தைத் தயாரித்துள்ளார். இப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் வெளியாகிறது. இதற்கு முன்பு ரஜினியை வைத்து கபாலி படத்தை இயக்கினார் பா.இரஞ்சித். அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் ரஜினியை இயக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது. ஹூமா குரேஷி, சமுத்திரக்கனி, நானா படேகர், ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

ஏப்ரல் 27 அன்று வெளியாகும் காலா படத்தின் டீசர் இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் காஞ்சி காமகோடி பீடத்தின் 69-ஆவது மடாதிபதியும், ஹிந்து மதத்தின் ஆன்மிகப் பெரியவர்களில் முன்னோடியுமான காஞ்சி ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புதன்கிழமை (பிப்ரவரி 28) காலை 7.45 மணிக்கு சித்தியடைந்தார். அவருக்கு வயது 82.

இதனையொட்டி, காலா டீசர் வெளியீட்டைத் தள்ளிவைப்பதாக தனுஷ் அறிவித்துள்ளார். இன்று வெளியாவதற்குப் பதிலாக காலா டீசர் நாளை வெளியாகும். காலா டீசருக்காக ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும் அவர் ட்வீட் செய்துள்ளார்.

இந்நிலையில் காலா டீசர் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இன்று ட்வீட் செய்துள்ளதாவது:

காலா படத்துக்காக யோகி பி-யுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி. அருமையான, அற்புத திறமைகள் கொண்டவர். காலா டீசரில் அருமையாகப் பங்களித்ததற்காக நன்றி. பிரித்து மேய்ந்து விட்டீர்கள் ஐயா என்று உற்சாகமாக ட்வீட் செய்துள்ளார். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.