/

ரஜினி நடித்த ‘கபாலி’யை பிரதிபலிக்கிறதா 'காலா?' டீஸர் ஒற்றுமைகள்!

இன்று காலை காலா டீஸரைப் பார்த்தவுடன் வழக்கம் போல ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:53 pm IST

இன்று காலை காலா டீஸரைப் பார்த்தவுடன் வழக்கம் போல ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். சிலர் விமரிசனம் செய்யத் தொடங்கிவிட்டனர். மீம்ஸ் க்ரியேட்டர்கள் இணையதளத்தில் பலவிதமான மீம்ஸ்களை உருவாக்கி மகிழ்கின்றனர்.

இயக்குநரும் கதாநாயகனும் இணைந்த அதே சமயம் கதையும் இணைந்து விட்டதா என்று சாமான்ய ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

'யார்ரா அந்த கபாலி? வரச் சொல்லுடா அவனை’ இது கபாலி

‘காலா என்னடா அது பேரு?’இது காலா

கபாலியில் விசிலுடன் ஆரம்பிக்கும், காலாவில் விசிலுடன் முடிகிறது டீஸர்

நீங்க ஏன் கேங்ஸ்டரா ஆனீங்க என்பதற்கு அட்டகாசமாக சிரிப்பார் ரஜினி. இதில் அமைதியாக காலாவிற்கு விளக்கம் தருவது அழகு.

நெருப்புடா, மகிழ்ச்சி, என்ன லா? என்ன லே இப்படி சில பல ஒற்றுமைகள். காலாவில் ரஜினி அமர்ந்திருக்கும் தோரணையும், டயலாக் பேசுவதும், இசையும், குரலும், எடிட்டிங்கும், பின்னணியும் என எல்லாமும் ஒன்றை மற்றொன்று பிரதிபலிப்பது போலவே உள்ளது. 

அதே இயக்குநர்...அதே நடிகர்....அதே இசையமைப்பாளர்....மொத்த டீமும் மீண்டும் அதே எனும் போது தற்போது கபாலி இரண்டாம் பாகமா காலா என்றும் மீம்ஸ் போடுகிறார்கள் நெட்டிசன்கள்.

காலா டீஸர் இதுவரையில் 67 லட்சம் வரை பார்வையாளர்களைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.