பெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

ரஜினியிடம் பணம் பறிக்க முயற்சி: கபாலி படப் புகார் குறித்து தயாரிப்பாளர் தாணு பதில்!

கபாலி படம் சென்னை நகரில் மட்டும் ரூ. 13 கோடி வசூலித்தது. இதை விளம்பரங்களில் வெளிப்படையாக நான் அறிவித்தேன்...

News image
Updated On :5 மார்ச் 2018, 8:51 am

எழில்

கபாலி படத்துக்கு நஷ்டக்கணக்குக் காண்பித்து ரஜினியிடம் பணம் பறிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள் என்று தயாரிப்பாளர் தாணு கூறியுள்ளார்.

கபாலி படத்தை வெளியிட்டதால் ரூ.2.77 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் படத்தைத் திரையிட முன்பணமாக செலுத்திய ரூ.1.50 கோடியை திருப்பித் தராமல் தயாரிப்பாளர் தாணு இருப்பதாகவும் ஜி.பி.செல்வகுமார் என்கிற விநியோகஸ்தர் புகார் தெரிவித்துள்ளார். ‘கபாலி’ படத்தை தென் ஆற்காடு, பாண்டிச்சேரி பகுதிகளில் வெளியிட தயாரிப்பாளர் தாணுவிடம் ரூ.6 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டு, ரூ.5.5 கோடி அளித்து படத்தை வாங்கினேன். ஆனால் படம் வெளியான பிறகு ரூ.2.77 கோடி நஷ்டம் ஏற்பட்டது. இந்த நஷ்டத்தை ஈடுகட்ட முன்பணமாகச் செலுத்திய ரூ.1.50 கோடியைத் திருப்பித் தருவதாக தாணு கூறினார். ஆனால் வாக்குறுதி கொடுத்து 20 மாதங்களாகியும் பணத்தைத் திருப்பித் தரவில்லை. அவர் என்னுடைய பணத்தைத் தராவிட்டால் தற்கொலை செய்வதைத் தவிர வேறுவழியில்லை. இதுகுறித்து ரஜினியிடமும் முறையிடுவேன் என்று புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தயாரிப்பாளர் தாணு, செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்ததாவது:

கபாலி படம் சென்னை நகரில் மட்டும் ரூ. 13 கோடி வசூலித்தது. இதை விளம்பரங்களில் வெளிப்படையாக நான் அறிவித்தேன். காலா படத்தால் நஷ்டம் என்கிற குற்றச்சாட்டு ரஜினியின் காலா படத்தைக் குறி வைத்து உருவாக்கப்பட்ட புகார். கடைசியில் உண்மை நிச்சயம் வெளிவரும். 
 
எனக்கு லாபத்தைக் கொடுத்த படம் கபாலி. அதில் நஷ்டம் எங்கு வருகிறது? கபாலி படத்திற்கும் செல்வக்குமார் என்பவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் கபாலி பட விநியோகஸ்தர் கிடையாது.

இதற்கு முன்பு நஷ்டம் என்று கூறியவர்களுக்கு ரஜினி சார் பணத்தைத் திருப்பித் தந்ததால் இந்த முறையும் அதுபோல பணம் பறிக்கலாம் என்று முயற்சி செய்கிறார்கள். என்னிடம் குற்ற்ச்சாட்டு கூறினால் கணக்குகளைக் கொண்டு கேள்வி கேட்பேன். இதனால் என்னிடம் வராமல் ரஜினியிடம் செல்கிறார். எவ்வளவு தவறான செயல் இது என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.