தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சூர்யாவை மீண்டும் இயக்கும் கே.வி. ஆனந்த்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

லைக்கா தயாரிக்கும் இப்படத்தில் சூர்யா நடிக்கிறார். இசை - ஹாரிஸ் ஜெயராஜ், எழுத்து - பட்டுக்கோட்டை பிரபாகர்...

News image
Updated On :13 மார்ச் 2018, 10:15 am

எழில்

செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே என்கிற படத்தில் நடித்து வரும் சூர்யா, அடுத்ததாக இயக்குநர் கே.வி. ஆனந்துடன் மீண்டும் இணைகிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை கே.வி. ஆனந்த் வெளியிட்டுள்ளார். 

லைக்கா தயாரிக்கும் இப்படத்தில் சூர்யா நடிக்கிறார். இசை - ஹாரிஸ் ஜெயராஜ், எழுத்து - பட்டுக்கோட்டை பிரபாகர், ஒளிப்பதிவாளர் - கேவ்மிக் யு அரி, கலை - கிரண்.

இத்தகவல்களை ஆனந்த் வெளியிட்டுள்ளார். 

அயன், மாற்றான் படங்களுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைகிறார்கள். ஒரு படத்தின் தோல்விக்குப் பிறகு அப்படத்தின் நடிகர் - இயக்குநர் கூட்டணியை மீண்டும் காணமுடியாது. ஆனால் மாற்றான் படம் வெற்றியடையாவிட்டாலும் கே.வி.ஆனந்துடன் மீண்டும் இணைகிறார் சூர்யா.

அயன், மாற்றான் படங்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார். அதேபோல இந்தப் படத்துக்கும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்யவுள்ள கேவ்மிக் - ஜிகர்தண்டா, அம்மா கணக்கு போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.