6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆர்யா பங்குபெறும் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்குத் தடை கோரிய வழக்கு: நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு!

எங்க வீட்டு மாப்பிள்ளை என்கிற நிகழ்ச்சி மூலமாகத் தனக்கான துணையைத் தேர்வு செய்ய களமிறங்கியுள்ளார் நடிகர் ஆர்யா...

News image
Updated On :20 மார்ச் 2018, 12:14 pm

எழில்

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எங்க வீட்டு மாப்பிள்ளை என்கிற நிகழ்ச்சி மூலமாகத் தனக்கான துணையைத் தேர்வு செய்ய களமிறங்கியுள்ளார் நடிகர் ஆர்யா. இந்த நிகழ்ச்சி கடந்த மாதம் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் 16 பெண்களில் இருந்து ஒருவரைத் தேர்வு செய்யவுள்ளார். ஆர்யாவின் இந்த முயற்சிக்கு அவருடைய நெருங்கிய நண்பர்களும் திரையுலகப் பிரபலங்களும் ஆதரவும் வாழ்த்துகளும் தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில் ஆர்யா பங்குபெறும் இந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்குத் தடை விதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ஜானகி அம்மாள் தன்னுடைய மனுவில், பெண்களின் மாண்பைக் கெடுக்கும் வகையில் உள்ள இந்த நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கவேண்டும். கலர்ஸ் தொலைக்காட்சியின் தலைமைச் செயல் அதிகாரி, நடிகர் ஆர்யா, நடிகை சங்கீதா மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை செயலாளர், திரைப்படத் தணிக்கை வாரியத் தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.