இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்! முடிவை கைவிடுகிறதா தமிழக அரசு?மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி உதவித்தொகை விடுவிப்புஇந்திய பொருள்கள் மீது 100% வரி: மசோதாவில் கையெழுத்திட்டார் டொனால்ட் டிரம்ப்!யுபிஐ கட்டணம்! 40 காசு செலுத்தினால் செத்துவிட மாட்டீர்கள் - நீதி ஆயோக் துணைத் தலைவர்தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் உடல்நிலையில் முன்னேற்றம்!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியீடு

அமீர்கான், ராஜமெளலி, முகேஷ் அம்பானி மெகா கூட்டணியில் மெகா பட்ஜெட் ‘மகாபாரதம்’!

மகாபாரதக் கதையை மூன்று முதல் ஐந்து பாகங்களாக எடுத்து முடிக்க குறைந்த பட்சம் 10 முதல் 15 வருடங்களாவது தேவைப்படலாம்.

Published On :

அமீர்கானின் நீண்ட நாள் கனவுத் திரைப்படங்களில் ஒன்றாகக் கூறப்படும் ‘மகாபாரதம்’ வெகு விரைவில் மெய்யாகப் போகிறது.

ஏனென்றால் படத்தை தயாரிக்கவிருப்பதும், இயக்கவிருப்பதும் அவரவர் துறையில் பலே தலைகள். படத்தை தயாரிக்கவிருப்பது ரிலையன்ஸ் முகேஷ் அம்பானி என்ற பேச்சு அடிபடத் தொடங்கியதுமே இயக்குனராக பாகுபலி புகழ் எஸ்.எஸ்.ராஜமெளலியின் பெயரும் அடிபடத் தொடங்கி விட்டது. காவியக் கதைகளை, இதிகாச டச்சுடன் பிரமாண்டமாக இயக்குவதில் பெயர் போனவர் ராஜமெளலி. அதற்கு  உதாரணமாக அவரது பாகுபலி 1& 2 திரைப்படங்கள் போதும். வசூல் ரீதியாக மட்டுமல்லாமல் தொழில்நுட்ப ரீதியாகவும் இந்திய சினிமாவை உலக அரங்கில் திரும்பிப் பார்த்து வியந்து நோக்கச் செய்த திரைப்படங்களில் இவை இரண்டுக்கும் பிரதான இடமுண்டு.

ராஜமெளலிக்கும் மகாபாரதத்தை திரைப்படமாக்க வேண்டும் என்பது நெடுநாள் ஆசை. அதை அவர் தனது பல நேர்காணலில் வெளிப்படையாகவே தெரிவித்திருப்பார். ஆனால், இதில் யோசிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் கால அவகாசம் தான். ராஜமெளலி யோசிப்பது அதற்காக மட்டுமல்ல, மகாபாரதத்தை திரைப்படமாக்க வேண்டுமெனில் மிகப்பெரும் பொருட்செலவு ஆகும். அதற்கான தயாரிப்பாளரைத் தேடுவதும் இதில் இன்னொரு கஷ்டம். ஆனால், இந்த இரண்டாவது கஷ்டத்தை தீர்க்கும் முகமாக முகேஷ் அம்பானி மாதிரியான தயாரிப்பாளர் பணத்தைத் தண்ணீராகச் செலவழிக்கத் தயாரானால் ஒருவேளை ராஜமெளலி தனது கனவுத் திரைப்படத்தை இயக்க முன் வரலாம். 

ராஜமெளலியைப் போலவே அமீர்கானும் மகாபாரதத்தை திரைப்படமாக்குவதில் உள்ள முதல் கஷ்டமாகப் பட்டியலிட்டிருப்பது கால அவகாசத்தைத் தான். மகாபாரதக் கதையை மூன்று முதல் ஐந்து பாகங்களாக எடுத்து முடிக்க குறைந்த பட்சம் 10 முதல் 15 வருடங்களாவது தேவைப்படலாம். அத்தனை பணத்தையும், நேரத்தையும் போட்டு இத்திரைப்படத்தை உருவாக்க அர்ப்பணிப்பு மிகுந்த நடிகர், நடிகைகளை வேறு தேர்வு செய்ய வேண்டும். மகாபாரதத்தை திரைப்படமாக்குவதில் இப்படிப் பல சிக்கல்கள் இருக்கின்றன.

Story image

எல்லாம் சரியாக அமைந்து மகாபாரதம் திரைப்படமானால் அமீர்கான் முன்னதாக ஒரு பேட்டியில் சொன்னபடி ஸ்ரீகிருஷ்ணராக ராஜமெளலியின் இயக்கத்தில் உருவாகும் மகாபாரதத்தில் நடிக்கலாம்.

பாலிவுட்டில் சமீபகாலமாக முகேஷ் அம்பானி தயாரிக்க, ராஜமெளலி இயக்க, அமீர்கான் நடிக்க மகாபாரதம் திரைப்படமாகவிருக்கிறது என்று ஒரு வதந்தி உலவிக் கொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் எதுவும் இன்னும் வெளிவரவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.