பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

ஒரே சமயத்தில் மூன்று படங்களில் நடிக்கும் சிவகார்த்திகேயன்: எம். ராஜேஷுடனான படம் பூஜையுடன் தொடங்கியது!

ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், சதீஷ் நடிப்பது மட்டும் தற்போது உறுதியாகியுள்ளது... 

News image
Updated On :9 மே 2018, 5:47 am

எழில்

சிவகார்த்திகேயன் நடிப்பில் எம். ராஜேஷ் இயக்கும் படத்தின் பூஜை நேற்று நடைபெற்றுள்ளது. இதையடுத்து ஒரே சமயத்தில் மூன்று படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், சதீஷ் நடிப்பது மட்டும் தற்போது உறுதியாகியுள்ளது. 

இயக்குநர் எம்.ராஜேஷ் சமீபத்தில் ஆல் இன் ஆல் அழகு ராஜா, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, கடவுள் இருக்கான் குமாரு ஆகிய படங்களை இயக்கியதையடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். கடந்த வருடம் ராஜேஷ் இயக்கத்தில் எந்தவொரு படமும் வெளியாகவில்லை.

பொன்ராம் இயக்கத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் ஆகிய படங்களில் நடித்த சிவகார்த்திகேயன் மீண்டும் அவருடைய இயக்கத்தில் நடித்து வருகிறார். 24ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் சீமராஜா படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி, நெப்போலியன், சிம்ரன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இசை - இமான். ஒளிப்பதிவு - பாலசுப்ரமணியம், பாடல்கள் - யுகபாரதி. முதல்முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் சமந்தா, சிம்ரன் ஆகியோர் நடிக்கிறார்கள். இது சிவகார்த்திகேயனின் 12-வது படம். விநாயகர் சதுர்த்தி அன்று (செப்டம்பர் 13) படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி பெற்றுள்ளது.

இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமாரின் அடுத்தப் படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் சிவகார்த்திகேயன் - ரஹ்மான் கூட்டணி முதல்முறையாக இணைந்துள்ளது. அறிவியல் தொடர்பான நவீனக் கதை என்பதால் முதற்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தப் படம் 2019-ல் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்த இரு படங்களின் படப்பிடிப்புகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிற நிலையில் மூன்றாவதாக எம். ராஜேஷின் படத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன். இதன் பூஜையும் நடைபெற்று விட்டதால் முதல்முறையாக ஒரே சமயத்தில் மூன்று படங்களில் நடிக்கும் நிலையில் உள்ளார் சிவகார்த்திகேயன்.

Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.