பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

என் மக்களுக்காக என்ன செய்யப் போகிறேன்?: அடுத்தத் திட்டம் குறித்து விடியோ வெளியிட்டார் ஜூலி!

இந்த நிலைமையில் நம் மண் மீது எனக்கும் பெரிய பொறுப்பு உள்ளது. என்னுடைய மக்களுக்காக நான் என்ன செய்யப் போகிறேன்?... 

News image
Updated On :9 மே 2018, 9:11 am

எழில்

நம் மண் மீது எனக்கும் பெரிய பொறுப்பு உள்ளது என்று கூறி பிக் பாஸ் ஜூலி விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் பங்கேற்று, கோஷங்கள் மூலம் அரசியல்வாதிகளை விமரிசனம் செய்து புகழ்பெற்றவரான ஜூலி, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில், போட்டியாளராகக் களமிறங்கினார். அந்த நிகழ்ச்சியில் திடீரென நடிகை ஓவியாவுக்கும் ஜூலிக்கும் இடையே கருத்து மோதல் உண்டானதால் ரசிகர்களின் ஆதரவை இழந்த ஜூலி, பிறகு போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதன்பிறகு கடந்த செப்டம்பர் மாதம், செவிலியர் போராட்டத்தில் கலந்துகொள்ள வந்த ஜூலிக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தார்கள். நானும் ஒரு செவிலியர்தான். என்னையும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க அனுமதியுங்கள் என்கிற ஜூலியின் கோரிக்கையை காவல்துறையினர் நிராகரித்ததால் ஜூலி ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்.

மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் போனதற்காக கடந்த வருடம் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் வாழ்க்கை திரைப்படமாகிறது. அனிதா வேடத்தில் ஜூலி நடிக்கவுள்ளார். Dr.S. அனிதா MBBS என இப்படத்துக்குப் பெயரிடப்பட்டுள்ளது. உத்தமி என்கிற படத்தில் நடித்து வரும் ஜூலி கதாநாயகியாக நடிக்கும் 2-வது படமிது.

இந்நிலையில் தன்னுடைய ட்விட்டர் தளத்தில் புதிய விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஜூலி. அதில் அவர் கூறியதாவது:

(டம்ளரிலிருந்த ஏதோவொன்றை அருந்தியபடி) எக்கச்சக்கமான அரசியல் மாற்றங்கள் தமிழ்நாட்டில் நடந்துகொண்டுதான் உள்ளது. நம் விவசாயிகளுக்கான வாழ்வாதாரம், நீட் தேர்வுக்கான எதிர்ப்புகள், காவிரிக்கான தேவைகள் என்று நிறைய உள்ளன.

இந்த நிலைமையில் நம் மண் மீது எனக்கும் பெரிய பொறுப்பு உள்ளது. என்னுடைய மக்களுக்காக நான் என்ன செய்யப் போகிறேன்?

(டம்ளரிலிருந்த ஏதோவொன்றை மீண்டும் அருந்துகிறார். தலையைக் கோதியபடி...) தொடரப்போகிறேன்....

என்று, தான் அடுத்துச் சொன்ன வார்த்தையின் ஒலியை நீக்கி விடியோவை வெளியிட்டுள்ளார்.

ஜூலி உண்மையிலேயே போராட்டம் ஒன்றில் களமிறங்கப்போகிறாரா அல்லது படம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான விளம்பரத்துக்காக இப்படிச் செய்கிறாரா என்கிற கேள்விகள் இந்த விடியோவைக் காணும்போது எழுகின்றன. எனினும் ஜூலியின் இந்த அறிவிப்புக்கு எதிர்வினையாற்றிய பலரும் ஜூலியை விமரிசனம் செய்து கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.