பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

அஜித் நடிக்கும் விசுவாசம்: படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்!

விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது. அங்கு ஒரு மாதம் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.... 

News image
Updated On :9 மே 2018, 12:14 pm

எழில்

அஜித் - சிவா மீண்டும் இணையும் விசுவாசம் படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கவுள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படம் தீபாவளியன்று வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நகைச்சுவை வேடங்களில் யோகி பாபு, ரோபோ சங்கர் ஒப்பந்தமாகியுள்ளார்கள். தம்பி ராமையா, போஸ் வெங்கட் போன்றோரும் இதில் நடிக்கிறார்கள். இப்படத்துக்கு இசை - இமான்; ஒளிப்பதிவு - வெற்றி. 

வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் சிவா. அதற்கு முன்பு கார்த்தி நடிப்பில் சிறுத்தை படத்தை இயக்கிய சிவா அதன்பிறகு அஜித் நடிக்கும் படங்களை மட்டுமே இயக்கிவருகிறார்.

சிவா இயக்கிய வீரம் படத்துக்குப் பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் என்னை அறிந்தால் படத்தில் நடித்தார் அஜித். அதற்குப் பிறகு வேதாளம் படத்தில் தொடங்கி விசுவாசம் வரை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குநர் சிவாவின் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் அஜித்.

இந்நிலையில் விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது. அங்கு ஒரு மாதம் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. அஜித், நயன்தாரா, தம்பி ராமையா ரோபோ சங்கர் உள்ளிட்ட நடிகர்கள் இதற்காக ஹைதராபாத்துக்குச் சென்றுள்ளார்கள். 

விசுவாசம் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.