'ஆக்ஷன் ஹீரோ' என்று சொல்லிக்கொள்ள இனிமேல் வெட்கப்படுவேன்: விஷால் வருத்தம்

'ஆக்ஷன் ஹீரோ' என்று சொல்லிக்கொள்ள இனிமேல் வெட்கப்படுவேன் என்று திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் விஷால் வருத்தம் தெரிவித்துள்ளார்.
'ஆக்ஷன் ஹீரோ' என்று சொல்லிக்கொள்ள இனிமேல் வெட்கப்படுவேன்: விஷால் வருத்தம்

சென்னை: 'ஆக்ஷன் ஹீரோ' என்று சொல்லிக்கொள்ள இனிமேல் வெட்கப்படுவேன் என்று திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் விஷால் வருத்தம் தெரிவித்துள்ளார்.

வி.பி.விஜி என்பவர் தயாரித்து, இயக்கியிருக்கும் படம் ‘எழுமின்’. குழந்தைகளுக்கு தற்காப்புக் கலை கற்றுக் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாக இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில், விவேக் மற்றும் தேவயானி இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா வடபழனியில் திங்களன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகர் விஷால் அங்கு நடைபெற்ற சிறுவர்களின் தற்காப்புக் கலை நிகழ்ச்சியினைத் துவக்கி வைத்தார். அப்பொழுது அவர் பேசியதாவது:

நானெல்லாம் 'ஆக்ஷன் ஹீரோ' என்று சொல்லிக்கொள்ள இனிமேல் வெட்கப்படுவேன் என்று நினைக்கிறேன். நான் பண்றதுதான் சூப்பர் ஆக்ஷன்’ என என் வீட்டில் எல்லாரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். நல்லவேளை இந்த விழாவுக்கு என் வீட்டில் இருந்து யாரும் வரவில்லை.

இந்நிகழ்ச்சியில் இந்தச் சிறுவர்கள் கலக்கியது உண்மையிலேயே எனக்கு ஊக்கமான விஷயம். இந்தப் படத்தின் இயக்குநர் விஜிக்குதான் முதலில் பாராட்டுகளைத் தெரிவிக்க வேண்டும். மிகச்சிறந்த தொடக்கத்தை இதன்மூலம் ஏற்படுத்தியுள்ளார்.

குழந்தைகள் தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி என்பதை முதலில் கற்றுக் கொடுங்கள். ஏனென்றால், இன்றைக்கு குழந்தைகள் மீதான பாலியல் வன்புணர்வு என்பது அதிகமாகி விட்டது எனபது உங்கள் அனைவர்க்கும் தெரியும். இந்தப் படம் மூலம் குழந்தைகளுக்கு தற்காப்புக் கலை சொல்லிக் கொடுப்பது அதிகமாகும் என நினைக்கிறேன்.

உண்மையில் இந்த நிகழ்வை கொடியசைத்துத் தொடங்கி வைக்க ஜாக்கிசான் தான் வந்திருக்க வேண்டும். நாங்கள் வந்திருக்கக் கூடாது. அவர்களுடைய பெர்ஃபாமன்ஸை விட, அவர்கள் முகங்களில் தெரிந்த தன்னம்பிக்கை தான் எனக்குப் பெரிதாகத் தெரிந்தது. இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் பார்த்த பிறகு, மறுபடியும் தற்காப்புக் கலை கற்றுக்கொள்ள வேண்டும் எனத் தோன்றுகிறது.

இவ்வாறு விஷால் பேசினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com