சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பழம்பெரும் தயாரிப்பாளர், இயக்குநர் முக்தா சீனிவாசன் காலமானார் 

பழம்பெரும் தயாரிப்பாளரும் இயக்குநருமான 'முக்தா' சீனிவாசன் உடலநலக்குறைவால் சென்னையில் காலமானார்.

News image
Updated On :29 மே 2018, 4:52 pm

DIN

சென்னை: பழம்பெரும் தயாரிப்பாளரும் இயக்குநருமான 'முக்தா' சீனிவாசன் உடலநலக்குறைவால் சென்னையில் காலமானார். 

தமிழ் திரையுலகின் பழம்பெரும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்களில் ஒருவர் 'முக்தா' சீனிவாசன். தஞ்சையை பூர்விகமாக கொண்டவர். இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 100-ஆவது படமான சூரியகாந்தி உட்பட 65 திரைப்படங்களை  இயக்கியவர்.  பல வெற்றிப்படங்களை தயாரித்துள்ளார். சில புத்தகங்களையும் எழுதியுள்ளார். பதிப்புத் துறையிலும் செயலாற்றி வந்தார்.   

சமீப காலமாக இவர் உடல்நலக்குறைவால் மிகவும் அவதிப்பட்டு வந்தார். அவ்வப்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். 

இந்நிலையில்  'முக்தா' சீனிவாசன் உடல் நலக்குறைவால் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய் இரவு காலமானார். அவருக்கு வயது 88 ஆகும். 

அவரது ஈமச் சடங்குகள் புதன்கிழமை அன்று நடைபெறும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.