காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

போராடவே கூடாது என ரஜினி சொல்லவில்லை: இயக்குநர் பா. இரஞ்சித் பதில்!

ரஜினியிடம் இன்று காலை பேசினேன். தூத்துக்குடி மக்களின் வலிகளை அறிந்தபிறகு ரஜினி கருத்து தெரிவித்துள்ளார்...

News image
Updated On :31 மே 2018, 9:19 am

எழில்

தூத்துக்குடியில் வன்முறையில் ஈடுபட்டது சாமானிய மக்கள் அல்ல, சமூக விரோதிகள் என, நடிகர் ரஜினிகாந்த் கூறினார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை ரஜினிகாந்த் புதன்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினார். 

பிறகு பேட்டியளித்த ரஜினி கூறியதாவது: தூத்துக்குடி போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்டது சாமானிய மக்கள் அல்லர். சில விஷக் கிருமிகள், சமூக விரோதிகள் உள்ளே நுழைந்துவிட்டனர். அந்த சமூக விரோதிகளை அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். இல்லையெனில், தமிழகத்துக்கு ஆபத்து. சமூக விரோதிகளை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இரும்புக்கரம் கொண்டு அடக்கி வைத்திருந்தார். சென்னை மெரீனாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் கடைசி நாளில் நடந்ததுபோல, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் கடைசி நாளிலும் சமூக விரோதிகள் புகுந்துதான் கெடுத்திருக்கின்றனர். போலீஸாரைத் தாக்கியதும் ஆட்சியர் அலுவலகத்தை அடித்து நொறுக்கியதும் குடியிருப்புகளுக்கும் வாகனங்களுக்கும் தீ வைத்ததும் இந்த சமூக விரோதிகள்தான். இது எனக்கு எப்படித் தெரியும் எனக் கேட்கவேண்டாம். எனக்கு நன்கு தெரியும் அவ்வளவுதான். சமூக விரோதிகள் போலீஸாரை அடித்த பிறகுதான் பிரச்னை பெரிதாகியுள்ளது என்றார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த காலா பட இயக்குநர் பா. இரஞ்சித் கூறியதாவது:

தூத்துக்குடி மக்களின் வலிகளை அறிந்தபிறகு ரஜினி கருத்து தெரிவித்துள்ளார். ரஜினியிடம் இன்று காலை பேசினேன். போராட்டமே கூடாது என்பது ரஜினியின் கருத்து அல்ல. எல்லாவற்றுக்கும் போராடக்கூடாது என்பதே ரஜினியின் நிலைப்பாடு. சில பிரச்னைகளுக்குப் போராடி உரிமை பெறுவது தவறில்லை என்று இரஞ்சித் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.