பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

தீபிகா படுகோன் - ரன்வீர் திருமணத்துக்காக வழங்கப்பட்ட கிருஷ்ணா ஸ்வீட்ஸ்!

தன்னுடைய நண்பர்களும் ஊடகத்தினருக்கும் திருமணம் தொடர்பாக நன்றிக் கடிதமும் இனிப்புகளையும் வழங்கியுள்ளார்கள்...

News image
Updated On :16 நவம்பர் 2018, 8:38 am

எழில்

ஹிந்தி திரையுலக நட்சத்திரங்கள் ரண்வீர் சிங்- தீபிகா படுகோன் திருமணம், இத்தாலியில் நடைபெற்றது. இத்தாலியில் உள்ள லேக் கோமா நகரில் சொகுசு பங்களா ஒன்றில் இவர்களின் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு ஹிந்தி திரையுலகைச் சேர்ந்த ஷாரூக் கான், சஞ்சய் லீலா பன்சாலி, ஃபாரா கான் மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. தீபிகா படுகோன் கொங்கனி சமூகத்தைச் சேர்ந்தவர். ரண்வீர் சிங், மும்பையைச் சேர்ந்த சிந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர். இதனால், ரண்வீர் சிங்- தீபிகா திருமணம் புதன்கிழமை கொங்கனி முறைப்படி நடைபெற்றது. வியாழக்கிழமை சிந்தி குடும்ப முறைப்படி திருமணம் நடைபெற்றது. 

பெங்களூரில் வரும் 21-ம் தேதியும், மும்பையில், வரும் 28-ம் தேதியும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிகளில் நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும் இவர்கள் விருந்தளிக்கிறார்கள். ரண்வீர் சிங்கும், தீபிகா படுகோனும், ராம் லீலா, பத்மாவத், பாஜிராவ் மஸ்தானி ஆகிய திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

இந்நிலையில் தன்னுடைய நண்பர்களும் ஊடகத்தினருக்கும் திருமணம் தொடர்பாக நன்றிக் கடிதமும் இனிப்புகளையும் வழங்கியுள்ளார்கள் தீபிகாவும் ரன்வீரும். இனிப்புகளில் நம் ஊரைச் சேர்ந்த கிருஷ்ணா ஸ்வீட்ஸின் மைசூர்பாவும் வட இந்திய ஸ்வீட்ஸும் தனித்தனியாக அனைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து தீபிகா-ரன்வீருக்கு நன்றி தெரிவித்து பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவுகள் எழுதியுள்ளார்கள். அதில் கிருஷ்ணா ஸ்வீட்ஸின் சுவை குறித்தும் பலர் பாராட்டி எழுதியுள்ளார்கள். தீபிகா சார்பாக வழங்கப்பட்ட கிருஷ்ணா ஸ்வீட்ஸ், பெங்களூர் கிளையில் வாங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாகச் சமூகவலைத்தளங்களில் வெளியான புகைப்படங்கள்:

Story image
Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.