விஜய் - அட்லி படத்தில் விவேக்!
இந்தப் படத்தில் தான் முக்கிய வேடத்தில் தான் நடிப்பதாக விவேக்கும் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது உறுதி செய்துள்ளார்...


மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி - ஏ.ஆர். ரஹ்மான் இணையும் அடுத்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ஏஜிஎஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது.
ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் - விவேக், படத்தொகுப்பு - ரூபன் எல். ஆண்டனி, கலை - முத்துராஜ், சண்டைப் பயிற்சி - அனல் அரசு என தொழில்நுட்பக் குழுவினரின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. நடிகர்கள், நடிகைகள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் 2019 தீபாவளிக்கு வெளியிடப்படவுள்ளது.
இந்நிலையில் தளபதி 63 அல்லது விஜய் 63 என்று தற்போதைக்குக் குறிப்பிடப்படும் இந்தப் படத்தில் விவேக் நடிக்கவுள்ளார். மெர்சல் படத்தில் நகைச்சுவை நடிகராக வடிவேலு நடித்திருந்த நிலையில் இந்தப் படத்துக்கு விவேக் தேர்வாகியுள்ளார். இந்தப் படத்தில் தான் முக்கிய வேடத்தில் நடிப்பதாக விவேக்கும் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது உறுதி செய்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...