/

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 25 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் வழங்கும் விஜய் சேதுபதி!

தமிழகத்தை தாக்கியுள்ள கஜா புயலால், இதுவரை இல்லாத அளவில் கிராமப்புற மக்கள், விவசாயிகள், மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்...

News image
Updated On :30 ஜனவரி 2024, 11:10 pm IST

தமிழகத்தை தாக்கியுள்ள கஜா புயலால், இதுவரை இல்லாத அளவில் கிராமப்புற மக்கள், விவசாயிகள், மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கஜா புயலின் கோரத் தாண்டவத்தில் நாகை மாவட்டம், நாகப்பட்டினம், வேதாரண்யம், தலைஞாயிறு, கீழையூர், கீழ்வேளூர் வட்டாரப் பகுதிகள் மிக கடுமையான சேதத்துக்கு உள்ளாகியுள்ளன. அனைத்து வகை விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டிருப்பதுடன், விவசாயிகளின் 20 ஆண்டு கால உழைப்பையும் நாசம் செய்துள்ளது இந்தப் புயல் சீற்றம். இதனால் விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருக்கிறது. 

இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 25 லட்சம் மதிப்புள்ள பொருள்களை (சார்ஜிங் டார்ச்லைட், தென்னை - பலா மரக்கன்றுகள்) நிவாரண உதவியாக வழங்கவுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. மேலும் களப்பணிகளில் தன்னுடைய ரசிகர்கள் ஈடுபடுவார்கள் என்றும் அறிவித்துள்ளார்.புயல் காரணமாக உயிரிழந்த குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.