தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

20 வருடத் திருமண வாழ்க்கைக்குப் பிறகு மனைவியைப் பிரிந்த பிரபல ஹாலிவுட் நடிகர்!

பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டி நிரோ 20 வருடத் திருமண வாழ்க்கைக்குப் பிறகு தனது மனைவியைப் பிரிந்துள்ளார்...

News image
Updated On :21 நவம்பர் 2018, 11:09 am

பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டி நிரோ 20 வருடத் திருமண வாழ்க்கைக்குப் பிறகு தனது மனைவியைப் பிரிந்துள்ளார். 

காட்ஃபாதர் 2, மீன் ஸ்டீரிட்ஸ், டாக்ஸி டிரைவர், ரேஜிங் புல், கேப் ஃபியர் குட்ஃபெலாஸ் போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர் ராபர்ட் டி நிரோ. காட்ஃபாதர் 2, ரேஜிங் புல் படங்களுக்காக ஆஸ்கர் விருதை வென்றுள்ளார்.

1976-ல் டயானே அபாட்டைத் திருமணம் செய்தார் ராபர்ட் டி நிரோ. 1988-ல் இருவரும் விவாகரத்து செய்தார்கள். 10 வருடக் காதலுக்குப் பிறகு 1997-ல் கிரேஸ் ஹைடவரைத் திருமணம் செய்தார். அடுத்த இரு வருடங்களில் இவர்கள் பிரிந்தார்கள். பிறகு 2004 முதல் மீண்டும் இணைந்து வாழ ஆரம்பித்தார்கள். இவர்களுக்கு இரு குழந்தைகள் உண்டு. 

இந்நிலையில் இருவரும் மீண்டும் பிரிந்துள்ளார்கள். 75 வயதான ராபர்ட் டி நிரோ, 63 வயது மனைவியைப் பிரிந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருவரும் தனித்தனியாக வாழ்வதாக உறவினர்கள் கூறியுள்ளார்கள். எனினும் ராபர்ட் டி நிரோ தரப்பு இதுகுறித்து எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.