முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் வழங்கியுள்ள நடிகர் விக்ரம்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிவாரணப் பணிகளுக்காக ரூ. 25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார் நடிகர் விக்ரம்...


கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிவாரணப் பணிகளுக்காக ரூ. 25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார் நடிகர் விக்ரம்.
கஜா புயலால் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்கள் பெரும் அழிவைச் சந்தித்துள்ளதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். பல ஆண்டுகளாக செலவிட்டு வளர்த்த தென்னை மரங்கள், வாழை, கரும்பு உள்ளிட்டவை பெரும் சேதமடைந்துள்ளன. அதிலிருந்து விவசாயிகள் மீள பல ஆண்டுகள் ஆகும். ஆடுகள், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளும் இறந்துள்ளன. கஜா புயலில் இருந்து மீண்டுவர பலரும் உதவிகளைச் செய்ய வேண்டுமென முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில் முதல்வர் நிவாரண நிதிக்கு நடிகர் விக்ரம் ரூ. 25 லட்சம் வழங்கியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...