மனிதர்களுக்கு மட்டுமே பூமி சொந்தமல்ல என்பதே 2.0 படக்கதை: அக்‌ஷய் குமார்

பூமி மனிதர்களுக்கு மட்டும் சொந்தமல்ல என்கிற கருத்தை 2.0 படம் வெளிப்படுத்தியுள்ளதாக நடிகர் அக்‌ஷய் குமார் கூறியுள்ளார்...
மனிதர்களுக்கு மட்டுமே பூமி சொந்தமல்ல என்பதே 2.0 படக்கதை: அக்‌ஷய் குமார்
Updated on
1 min read

பூமி மனிதர்களுக்கு மட்டும் சொந்தமல்ல என்கிற கருத்தை 2.0 படம் வெளிப்படுத்தியுள்ளதாக நடிகர் அக்‌ஷய் குமார் கூறியுள்ளார்.

ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள 2.O படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்துள்ளார். கதாநாயகி - ஏமி ஜாக்சன். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் 2.0 படம் உருவாகியுள்ளது. 

ரூ. 550 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதையடுத்து இந்தப் படம் திட்டமிட்டபடி வரும் 29 அன்று வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் வெளிவரவுள்ளதால் இப்படத்துக்கு இந்திய அளவில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

இந்தப் படம் குறித்த செய்தியாளர் சந்திப்பில் அக்‌ஷய் குமார் கூறியதாவது:

இந்தப் பூமி மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கும் பறவைகளும்தான். இந்தப் பூமியில் வாழும் பிற உயிரினங்கள் மீது அக்கறை கொள்ளும் காட்சி படத்தில் உள்ளது. விலங்குகளும் தாவரங்களும் மனிதர்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கமுடியாது என்றாலும் இந்த மண்ணில் வாழ அவற்றுக்கு உரிமை உண்டு. எனவே இயற்கை அன்னையை நாம் சீரழிக்கக்கூடாது. எனவே இதுபோன்ற முக்கியமான கருத்தை 2.0 படம் எடுத்துரைக்கிறது. 

எனக்கு முழுக் கதையும் தெரியும். கதைக்கரு என்னை மிகவும் கவர்ந்தது. இந்தக் கதையை ஏன் இதுவரை எடுக்கவில்லை என்று ஆச்சர்யப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com