சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்துக்கு பேட்ட என பெயர் வைக்கப்பட்டது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
இதில் விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். அனிருத் முதல்முறையாக ரஜினிகாந்துக்கு இப்படத்தில் இசையமைக்கிறார்.
இந்நிலையில், பேட்ட படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதில் சமீபத்தில் வெளியிடப்பட்ட 2-ஆவது லுக் தோற்றத்தில் இருப்பது போன்ற ரஜினிகாந்த் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
பேட்ட படத்தின் மோஷன் போஸ்டர், மிகப்பெரிய மீசையுடன் தோன்றும் ரஜினியின் 2-ஆவது லுக் ஆகியவை ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் எனும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.




தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நான் முதல்வன் திட்டத்தால் 56 ஐஏஎஸ் அதிகாரிகள் உருவாக்கம்: அமைச்சா் எ.வ.வேலு

அருணாசலில் சில இடங்களுக்குப் புதிய பெயரிட்ட சீனா! இந்தியா நிராகரிப்பு!!

தமிழக, காரைக்கால் மீனவா்கள் 12 போ் இலங்கை கடற்படையினரால் கைது
ஈரானுக்கு ஆயுதம் வழங்கினால் பெரும் பிரச்னையில் சிக்குவீா்கள்: சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


