அமிதாப் பச்சனையும் விட்டுவைக்காத மீடூ இயக்கம்! மேக் அப் கலைஞர் ஸப்னா பவ்னானி குற்றச்சாட்டு!

மீடூ இயக்கம் இந்தியாவில் தற்போது மிகவும் பரபரப்பான அலையை உருவாக்கி வருகிறது.
அமிதாப் பச்சனையும் விட்டுவைக்காத மீடூ இயக்கம்! மேக் அப் கலைஞர் ஸப்னா பவ்னானி குற்றச்சாட்டு!

மீடூ இயக்கம் இந்தியாவில் தற்போது மிகவும் பரபரப்பான அலையை உருவாக்கி வருகிறது. அலோக் நாத், விகாஸ் பாஹ்ல், நானா படேகர், சாஜித் கான், அனு மாலிக், கைலாஷ் கேர் உள்ளிட்ட பாலிவுட்டின் பல பெரிய பெயர்கள் இதுவரை வெளிவந்துள்ளன. இது பாலிவுட் திரையுலகத்தை மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்திய மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை, புகழ் பெற்ற ஹேர் ஸ்டைலிஸ்ட் ஸப்னா மோடி பவ்னானி என்பவர், தனது ட்விட்டரில் பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சனை நேரடியாகத் தாக்கியுள்ளார். பிங்க் திரைப்படம் உள்ளிட்டு தனது பிறந்த நாளன்று எடுக்கப்பட்ட நேர்காணல் ஒன்றுக்கு நன்றி தெரிவித்த அமிதாப் பச்சன் ட்விட்டரில் பதிவிட்டிருந்த போது, அதற்கு பதிலாக ஸப்னா, ‘இது சுத்தப் பொய். உங்கள் படமான பிங்க் வெளியாகி நல்ல பெயரை உங்களுக்கு பெற்றுத் தந்திருக்கலாம், ஆனால் உங்கள் நல்ல பெயர் விரைவில் காலாவதியாகப் போகிறது. உங்கள் சுயரூபம் நிச்சயம் விரைவில் வெளிவரும். உண்மை நிச்சயம் வெளியில் வரத் தான் செய்யும். இப்போது நீங்கள் உங்கள் கையை கடிக்கத் தொடங்கி இருப்பீர்கள், என நம்புகிறேன், காரணம் கடிப்பதற்கு உங்கள் நகங்கள் போதாது’ என்று மீடூ ஹாஷ்டேக்குடன் ‘கம் அவுட் வுமன்’ என்று மற்ற பெண்களுக்கு அழைப்பும் விடுத்து பதிவிட்டிருந்தார் ஸப்னா. 

பெண்களை வெளியே வந்து உண்மையைச் சொல்லுங்கள் என்று அழைப்பு விடுத்ததன் காரணத்தை அவர் கூறுகையில், 'அபிதாப் பச்சனின் பாலியல் தொல்லைகளைப்  பற்றி பல பெண்கள் கூறி உள்ளதை அறிந்துள்ளேன். அவர்கள் வெளியே வந்து உண்மையைச் சொல்ல வேண்டும். அவருடைய போலித்தனம் மிகவும் சோர்வடையச் செய்கிறது’ என்று கூறியிருந்தார்.

அக்டோபர் 11-ம் தேதி, தனது 74-வது பிறந்த நாளன்று அபிதாப் பச்சன் மீடூ இயக்கத்தைப் பற்றிய தனது மெளனத்தை உடைத்தார். ட்விட்டரில் ஒரு நீண்ட பதிவை எழுதி வெளியிட்டிருந்தார். அதில் பெண்களுக்கு எதிரான இத்தகைய மோசமான செயல்கள் கண்டிக்கத்தக்கது. குறிப்பாக அவர்களது பணி இடத்தில் பாலியல் தொல்லைகள் அநாகரிகமானது என்று பதிவிட்டிருந்ததற்கு எதிர்வினையாகவும் ஸப்னாவின் மேற்சொன்ன பதிலடி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com