2005-ல், லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்து வெளியான படம் சண்டக்கோழி. வசூல் ரீதியாக வெற்றியைப் பெற்றதோடு விஷாலுக்கு ஆக்ஷன் அவதாரத்தையும் அளித்தது. அதன்பிறகு அவர் ஆக்ஷன் நாயகனாக அடையாளம் காண்பதற்கு அந்தப் படமே முக்கியக் காரணம்.
லிங்குசாமி - விஷால் - ராஜ்கிரண் கூட்டணியில் உருவாகியுள்ள படம் - சண்டக்கோழி 2. கீர்த்தி சுரேஷ், மீரா ஜாஸ்மின், வரலட்சுமி சரத்குமார் போன்றோரும் நடித்துள்ளார்கள். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்தப் படம் வெளியானது.
சண்டக்கோழி 2 படம் பற்றி விஷால் கூறியதாவது:
என் படங்களில் அதிக பட்ஜெட் கொண்ட படம் - சண்டக்கோழி 2 தான். நானே தயாரிப்பாளராகவும் உள்ளதால், எங்கு, எப்படி படமாக்கப்பட்டுள்ளது என்பது தெரியும். மதுரையில் சில காட்சிகள் படமெடுக்கப்பட்டாலும் ஊர் திருவிழாக் காட்சிகள் சென்னையில் செட் போடப்பட்டு படமாக்கப்பட்டது. அங்கு மட்டும் இரண்டு மாதம் படப்பிடிப்பு நடைபெற்றது.
சண்டக்கோழி படம் எனக்குக் கிடைத்தது அதிர்ஷ்டம். 10 வருடங்களுக்கு முன்பு இரு பெரிய நடிகர்களுக்குச் (விஜய் & சூர்யா) சொல்லப்பட்டது. இருவரும் மறுத்துவிட்டார்கள். மகன் & தந்தை என இரு வேடங்களையும் ஏற்க அவர்கள் விருப்பப்பட்டுள்ளார்கள்.
கதைக்கு நியாயமாக நடந்துகொள்ளவேண்டும் என்பது என் விருப்பம். இதை என் திரை வாழ்வின் ஆரம்பக் கட்டத்திலேயே புரிந்துகொண்டேன். கதை கதாநாயகனாக உள்ள படங்களில் நடிக்கவே கவனம் செலுத்தி வருகிறேன் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தலில் போட்டியிடாதது ஏன்? விளக்கிய அண்ணாமலை

கன்னியாகுமரியில் வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

இன்று 3, நாளை 4 மாவட்டங்களில் கனமழை!

13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை! இளைஞர் கைது!
வீடியோக்கள்

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு


