ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

அட! ஜீ தமிழில் வெளியாகவுள்ள ரஜினி பேட்டி!

நவம்பர் 6 அன்று மதியம் 3 மணிக்குப் பேட்டி ஒளிபரப்பாகவுள்ளது. 2.0 படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை...

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:12 pm

எழில்

தனது படங்கள் வெளிவரும்போது அதன் விளம்பரத்துக்காக பேட்டி கொடுப்பதில் அதிக ஆர்வம் காட்டாதவர் ரஜினி. அதிலும் தொலைக்காட்சிப் பேட்டிகளில் அரிதாகவே அவரைக் காணமுடியும். இந்நிலையில் நவம்பர் 29 அன்று ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 படம் வெளிவருகிற நிலையில் தீபாவளித் தினத்தன்று ரஜினியின் பேட்டி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. 

நவம்பர் 6 அன்று மதியம் 3 மணிக்குப் பேட்டி ஒளிபரப்பாகவுள்ளது. 2.0 படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை ஜீ தொலைக்காட்சி பெற்றுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளின் 2.0 தொலைக்காட்சி உரிமம், ரூ. 110 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளது. மேலும் 15 வருடக் காலத்துக்கு மட்டுமே இந்த உரிமம் வழங்கப்பட்டுள்ளது.  இதையடுத்து ஜீ தொலைக்காட்சிக்கு மட்டும் பேட்டியளிக்கச் சம்மதித்துள்ளார் ரஜினி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.