சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

செக்கச் சிவந்த வானம் போஸ்டரில் ரஹ்மான் படம்: ரசிகர்கள் குஷி!

மாலை 5 மணிக்கு 2 பாடல்கள் வெளியிடப்படுகின்றன. அதன்பிறகு சென்னையில் ரஹ்மான் முன்னிலையில் இசை நிகழ்ச்சி...

News image
Updated On :5 செப்டம்பர் 2018, 5:53 am

மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் செக்கச் சிவந்த வானம் படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் போன்றோர் நடிக்கிறார்கள். இசை: ஏ.ஆர்.ரஹ்மான். ஒளிப்பதிவு: சந்தோஷ் சிவன், படத்தொகுப்பு: ஸ்ரீகர் பிரசாத். இது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் 17-வது தயாரிப்பு.

இந்தப் படம்  செப்டம்பர் 28 அன்று வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 13 அன்று சீமராஜா-வும் செப்டம்பர் 20 அன்று சாமி 2-வும் செப்டம்பர் 27 அன்று என்னை நோக்கி பாயும் தோட்டாவும் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் செப்டம்பர் 28 அன்று செக்கச் சிவந்த வானம் வெளியாகவுள்ளது. 

இந்நிலையில், இன்று இப்படத்தின் பாடல்கள் வெளியிடப்படுகின்றன. மாலை 5 மணிக்கு 2 பாடல்கள் வெளியிடப்படுகின்றன. அதன்பிறகு சென்னையில் ரஹ்மான் முன்னிலையில் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதையொட்டி வெளியிடப்பட்டுள்ள பட போஸ்டரில் நடிகர்களுடன் இணைந்து ரஹ்மானின் படமும் இடம்பெற்றிருப்பது ரஹ்மான் ரசிகர்களைக் குஷிப்படுத்தியுள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.