சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

70களில் ஹாலிவுட்டைக் கலக்கிய நடிகர் பர்ட் ரெனால்ட்ஸ் காலமானார்

ஆரம்பகாலத்தில் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துவந்த ரெனால்ட்ஸ், 1972-ல் Deliverance படம் மூலமாகக் கவனம் ஈர்த்தார்...

News image
Updated On :7 செப்டம்பர் 2018, 5:53 am

70களில் ஹாலிவுட்டைக் கலக்கிய நடிகர் பர்ட் ரெனால்ட்ஸ், காலமாகியுள்ளார். அவருக்கு வயது 82.

பிளோரிடா மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு குயிண்டன் என்று ஒரு மகன் உண்டு.

ஆரம்பகாலத்தில் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துவந்த ரெனால்ட்ஸ், 1972-ல் Deliverance படம் மூலமாகக் கவனம் ஈர்த்தார்.  இந்தப் படத்தின் மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தார்கள். The Longest Yard (1974), Smokey and the Bandit (1977), Semi-Tough (1977), Hooper (1978), Smokey and the Bandit II (1980), The Cannonball Run (1981), The Best Little Whorehouse in Texas (1982) என அடுத்தப் பத்து வருடங்களில் வரிசையாக ஹிட் படங்கள் கொடுத்து முன்னணி நடிகர் ஆனார்.

90களில் மீண்டும் தொலைக்காட்சித் தொடரில் நடித்த ரெனால்ட்ஸ், 1997-ல் Boogie Nights படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.