சின்னத்திரை உதவி இயக்குநர் தீக்குளித்து தற்கொலை! 

தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வரும் நடிகை நிலானி அண்மையில் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்திருந்தார்
சின்னத்திரை உதவி இயக்குநர் தீக்குளித்து தற்கொலை! 
Published on
Updated on
1 min read

தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வரும் நடிகை நிலானி அண்மையில் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்திருந்தார். அதில் தொலைக்காட்சி தொடரில் உதவி இயக்குநராக பணி புரியும் காந்தி லலித் குமார் என்பவர் தன்னைத் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்துவதாகக் குறிப்பிட்டிருந்தார். நிலானிக்கும், காந்தி லலித்குமாருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளாக பழக்கம் இருந்துள்ளது. ஆனால் திருமணம் செய்து கொள்வதைப் பற்றி கருத்து வேறுபாடு அவர்களுக்கிடையே இருந்து வந்தது. 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடியவர்களை சுட்டுக் கொன்ற போலீஸாரைக் கண்டித்து அச்சமயத்தில் காணொலி ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை நிலானி. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு, எச்சரிக்கைக்குப் பின் விடுவிக்கப்பட்டார். அண்மையில் தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பில் நிலானி பங்கேற்றிருந்த போது, அங்கு வந்த காந்தி லலித்குமார் நிலானியுடன் தகராறில் ஈடுபட்டார். அவரை அவதூறாகவும் பேசியுள்ளார். இதனால் படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு ஏற்பட்டது. படப்பிடிப்பில் இருந்தவர்கள் காந்தி லலித்குமாரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் தான் நடிகை நிலானி, மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அப்புகாரின் பேரில் மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

நிலானியின் மறுப்பும், தனக்கெதிராக புகார் அளித்த கோபமும் சேர்ந்துவிட காந்தி லலித்குமார், நேற்று சென்னை கே.கே.நகர் ராஜா மன்னார் சாலையில் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரது உடலில் எரிந்த தீயை அணைத்து, அவரை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்ததனர். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர், ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். இச்சம்பவம் சின்னத்திரை நடிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com